Tuesday, January 17, 2012

2 லட்சம் பேருக்கு புதிய மாத்திரையை கொடுத்து சாப்பிட சொல்லி கட்டாயப்படுத்திய சீன அதிகாரிகள் ?


சீனாவில் 2 லட்சம் பேருக்கு வாயு தொல்லையை போக்கும் மாத்திரை கொடுத்து பரிசோதனை செய்துள்ளனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. 
சீனாவில் கிழக்கு பகுதியில் உள்ளது ஷாங்டாங் மாகாணம். வாயு தொல்லையால் (கேஸ்ட்ரிக் பிராப்ளம்) பலர் பாதிக்கப்பட்டு வருவதால், புதிய மாத்திரையை சுகாதார துறை அதிகாரிகள் வழங்கி உள்ளனர். ஷாங்டாங்கின் லின்கூ கவுன்டியில் 2 லட்சம் பேருக்கு மாத்திரையை கொடுத்து சாப்பிட சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளனர். அந்த மாத்திரையில் பெயர் இல்லை. மருத்துவ பரிசோதனையின் ஒரு கட்டமாக இதை அதிகாரிகள் செய்து வருவதாக உள்ளூர் மக்களும், இன்டர்நெட்டில் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், அதிகாரிகள் கூறுகையில், ÔÔபுதிய மாத்திரையை உட்கொள்ள சொல்லி யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. அவர்களே தாமாக முன்வந்து மாத்திரை உட்கொண்டனர்ÕÕ என்று மறுப்பு தெரிவித்துள்ளனர். ÔÔமாத்திரையை சாப்பிட்ட பின், பக்கவிளைவுகள் இருந்தனÕÕ என்று லின்கூ மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், ÔÔவாயு தொல்லைக்கு வழக்கமாக பரிந்துரைக்கப்படும் ஒமிபிராஸோல், டெட்ராசைக்ளின், மெட்ரானிடஸோல் போன்ற மாத்திரைகளைதான் வழங்கி உள்ளோம். புதிய மாத்திரை எதுவும் இல்லைÕÕ என்று அதிகாரிகள் கூறிவருகின்றனர்.
thanks to gnanamuthu.com

0 comments:

Post a Comment