Wednesday, January 18, 2012

பாட்லா ஹவுஸ்:காங்கிரஸ் முஸ்லிம்களை ஏமாற்ற முயற்சிக்கிறது – முலாயம்சிங்

லக்னோ:பாட்லா ஹவுஸ் சம்பவம் தொடர்பாக பரஸ்பரம் மாறுபட்ட அறிக்கைகளை வெளியிட்டு காங்கிரஸ் முஸ்லிம்களை ஏமாற்ற முயற்சிக்கிறது என சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

muyalam

இதுக்குறித்து அவர் கூறியிருப்பது: வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முஸ்லிம்களை ஏமாற்ற மட்டுமே காங்கிரஸ் தலைவர்கள் மாறுபட்ட அறிக்கைகளை வெளியிடுகின்றனர்.
பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் போலி என கூறும் திக்விஜய்சிங்கை காங்கிரஸ் கட்சி ஒன்று கட்சியில் இருந்து நீக்கவேண்டும். அல்லது என்கவுண்டர் உண்மையானது என கூறும் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
முஸ்லிம்கள் தொடர்பான எவ்விவகாரத்தையும் காங்கிரஸ் முக்கியத்துவமாக கருதாது. ஆகையால்தான் தேர்தல் வரும் சூழலில் பாட்லா ஹவுஸ் பிரச்சனையை கையில் எடுத்துள்ளனர்.

பாட்லாஹவுஸ் என்கவுண்டர் போலியானது என்பதை முதன் முதலில் கூறியது சமாஜ்வாடி கட்சியாகும். இச்சம்பவத்தைக் குறித்து நீதிவிசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை ஐக்கியமுற்போக்கு கூட்டணி அரசு அங்கீகரிக்க இதுவரை தயாராகவில்லை. ஆனால், தற்போது முஸ்லிம்களை முட்டாள்களாக்க அரசியல் மோசடியுடன் களமிறங்கியுள்ளது. சமாஜ்வாடி கட்சி ஆட்சியை கைப்பற்றினால் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும். இவ்வாறு முலாயம் கூறினார்.

0 comments:

Post a Comment