Tuesday, January 17, 2012

அமெரிக்கா .... இஸ்ரேலின்.... கவலை!.....


hezbullahhasan nasrullahலெபனானின் போராளி இயக்கம்.. ஆயுதங்களை கைவிட வேண்டும்.. ஹஸன் நஸ்ருல்லாஹ்.. நிராகரிப்பு..
லெபனான் சுற்றுப்பயணத்தின் போது ஆயுதங்களை கைவிட வேண்டும் என ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் விடுத்த கோரிக்கையை லெபனானின் போராளி இயக்கமான ஹிஸ்புல்லாஹ் நிராகரித்துவிட்டது.

ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ் இதுத் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

‘லெபனானின் தற்காப்பிற்கு ஆயுதங்கள் அத்தியாவசியமானதாகும். இக்காரியத்தில் ஹிஸ்புல்லாஹ்வின் நிலைப்பாடு தெளிவானது. ஹிஸ்புல்லாஹ்வின் வசமிருக்கும் ஆயுதங்கள் மட்டுமே லெபனான் மக்களின் பாதுகாப்பிற்கு ஒரே உத்தரவாதம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஆயுதபலத்தைக் கண்டு மேற்கத்திய நாடுகள் கவலை அடைவதில் எங்களுக்கு மகிழ்ச்சியே. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கவலை எங்களுக்கு மேலும் உத்வேகத்தை அளிக்கிறது.’ இவ்வாறு நஸ்ருல்லாஹ் கூறியுள்ளார்

0 comments:

Post a Comment