ஈரானில் இஸ்லாமிய கொள்கைகள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன. மேற்கத்திய கலாசாரத்துக்கு இங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் வசிக்கும் ஈரான் நடிகை கோல்ஷிப்டே பராஹனி, அந்நாட்டு பத்திரிகைக்கு அரை நிர்வாண போஸ் கொடுத்ததை கண்டித்து அவர் தாய்நாடு திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பார்பி பொம்மைகள் விற்று வந்த பத்துக்கும் அதிகமான கடைகளுக்கு அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர். மினி ஸ்கர்ட், நீச்சல் உடையில் பார்பி பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன. பெண்கள் பொது இடங்களில் செல்லும்
போது முகத்தை மறைக்கும் அளவுக்கு பர்தா அணிந்து செல்ல வேண்டும் என்று ஈரானில் சட்டதிட்டம் உள்ளது.இதுபோன்ற ஒரு சமுதாயத்தில் பார்பி பொம்மைகள் கலாசார சீரழிவுக்கு வழிவகுக்கின்றன. இந்த பொம்மைகள் விற்பனைக்கு ஈரானில் கடந்த 90ம் ஆண்டே தடை விதிக்கப்பட்டது.
பார்பி பொம்மைகளுக்கு பதில், ஈரான் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் தாரா - சாரா என்ற பெயரில் இரட்டை பொம்மைகள் அறிமுகம் செய்யப்பட்டன.
எனினும், டெஹ்ரானில் பார்பி பொம்மைகளை விற்பனை செய்து வந்த கடைகளுக்கு சீல் வைத்துள்ளோம் என்று அதிகாரிகள் கூறினர்.
thanks to asiananban.blogspot.com
சுட்டியை சொடுக்கி படியுங்கள்
ReplyDelete1. ---->
காணத்தவறாதீர்கள். உலகிலேயே மிக பெரிய, மிக சிறிய திருகுரான் பிரதிகளின் அரிய சிறுகண்காட்சி விடியோக்கள் .
மழலைகள், சிறார்கள் குரான் ஓதும் விடியோக்கள்.
.
சுட்டியை சொடுக்கி படியுங்கள்
2. ---- >
புலிகளின் தமிழ்முஸ்லிம் இனஒழிப்பின் ஈரநினைவுகள். பகுதி 3.
ஈழத்தில் புலிகளால் வதைக்கப்பட்ட இன அழிப்பு செய்யப்பட்ட இஸ்லாமியர்கள் குறித்தப் பேச மறுப்பவனும் பேசுவதைத் தடைசெய்பவனும் தான் விரும்பிய குரலில் இஸ்லாமியர்களைப் பேச நிர்ப்பந்திப்பவனும் இஸ்லாமியர்களின் தோழனா அல்லது மூத்த நரேந்திர மோடியா எனத் தோழர்கள் சிந்திக்க வேண்டும்.
இலங்கையில் முஸ்லிம்களுக்கு நடந்திருப்பது என்ன? நடப்பது என்ன? என்பது பற்றி தெளிவாக இந்திய மக்களுக்கு கூற வேண்டியுள்ளது. உண்மை அறியாத மக்கள் கொடூரப் புலிகளுக்கு ஆதரவுக் கொடி தூக்குகின்றனர் < ----