
சம்பவம் தொடர்பாக, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டனர்.புதுப்பேட்டையைச் சேர்ந்த அன்பு என்பவர் அளித்த புகாரின்படி, நக்கீரன் கோபால் மீது, ஆறு பிரிவுகளின் கீழ் ஜாம்பஜார் போலீசார் வழக்குப் பதிவு
செய்தனர். நக்கீரன் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதன் மேலாளர் சுரேஷ்குமார், ஜாம்பஜார் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, எம்.எல்.ஏ., அசோக் உள்ளிட்டவர்கள் மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி வாசுகி அடங்கிய,"முதல் பெஞ்ச்' முன், நக்கீரன் கோபால் சார்பில் வழக்கறிஞர் பி.டி.பெருமாள் நேற்று ஆஜராகி, குடும்பத்தினர்
மற்றும் ஊழியர்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு கேட்டு, தாக்கல் செய்யும் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கோரினார்.அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், "முதல்வர் ஜெயலலிதா பற்றி தவறான செய்திகளை வெளியிட, ஐகோர்ட் ஏற்கனவே தடை விதித்துள்ளது. கோர்ட் உத்தரவை மீறும் வகையில், அவதூறாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எனவே, நக்கீரன் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும்' என கோரினார்.
இதையடுத்து, இருதரப்பிலும் மனு தாக்கல் செய்யும் பட்சத்தில், விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக, "முதல் பெஞ்ச்' தெரிவித்தது. இம்மனுக்கள், இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்களுக்கு முன்ஜாமின் கோரி, நக்கீரன் கோபால், காமராஜ் மனு தாக்கல் செய்துள்ளனர். இம்மனுவும், இன்றுவிசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு பிரமுகர் வாசுதேவன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "முதல்வருக்கு அவதூறு ஏற்படுத்தும் எண்ணத்தில் பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளனர். எனவே, கோபால், காமராஜ், உமர்முக்தார் மீது கிரிமினல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஜாம்பஜார் போலீசில் புகார் அளித்துள்ளேன். புகாரை பெற்றதற்கான ரசீது கொடுக்கப்படவில்லை. என் புகாரை பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்' என கூறியுள்ளார்.
ஐகோர்ட் வெளியில் அ.தி.மு.க., வழக்கறிஞர்கள் திவாகர், திருமாறன், பாபு, ரமேஷ் உள்ளிட்டோர் நக்கீரனுக்கு எதிராக கோஷமிட்டனர். வழக்கறிஞர்கள் சிலர், நக்கீரன் இதழை தீயிட்டுக் கொளுத்தினர். உருவப்பொம்மையை எரித்தனர். நக்கீரன் இதழ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பிரஸ் கவுன்சிலுக்கு வழக்கறிஞர் திவாகர் தலைமையில் அ.தி.மு.க., வழக்கறிஞர்கள் பலர்கையெழுத்திட்டு மனுவும் அனுப்பியுள்ளனர்.
as
thanks to thedipaar.com
0 comments:
Post a Comment