Thursday, January 19, 2012

அமெரிக்க திருப்பி கேட்ட உளவு விமானத்திற்கு பதிலாக ‌பொம்மை விமானம் ?


ஈரான் வான்எல்லைப்பகுதியில், அத்துமீறி நுழந்தை அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் ஈரான் ராணுவத்தினரால் சுட்டுவீழத்தப்பட்டது. அந்த விமானத்தை போன்று மாதிரி பொம்மை விமானத்தை அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்க ஈரான் முடிவு செய்துள்ளது.

கடந்த டிசம்பர் 5-ம் தேதியன்று ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியையொட்டிஉள்ள ஈரான் ராணுவ முகாம்களை வேவு பார்க்க அமெரிக்கா அனுப்பிய ஆர்.-க்யூ-170 என்ற ஆளில்லா உளவு விமானம் ஈரான் ராணுவத்தினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது.அந்த விமானம் தற்போது ஈரான் வசம் உள்ளது. இதையறித்த அமெரி்க்கா, அந்த ஆளில்லா உளவு விமானத்தை திருப்பிதர ஈரானுக்கு கோரிக்கை விடுத்தது. 


இது குறித்து ஈரான் வானொலி வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்க திருப்பி கேட்ட உளவு விமானத்திற்கு பதிலாக ‌பொம்மை விமானம் ஒன்றை அதே போன்று தயாரித்துள்ளளோம் , 30 செ.மீ. நீளமும், 14 செ.மீ. அகலும் கொண்ட பொம்மை விமானம் 70 ஆயிரம் ரியால்,  மதிப்புள்ளது. இந்த பொம்மை விமானத்தை, வரும் பிப்ரவரி 5-ம் தேதி ஈரான் நாட்டின் இஸ்லாமிய குடியரசு தோன்றியதன் 34-ம் ஆண்டு விழா கொண்டாடப்படவுள்ளது . அப்போது அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கவுள்ளோம். இவ்வாறு அந்த வானொலி வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளது.
thanks to gnanamuthu

0 comments:

Post a Comment