Tuesday, January 24, 2012

ஃபலஸ்தீன் சிறுவர்களுக்கு இஸ்ரேல் சிறையில் சித்திரவதை


The Palestinian children – alone and bewildered – in Israel's Al Jalame jail
டெல்அவீவ்:வடக்கு இஸ்ரேலில் அல் ஜலேம் சிறையில் ஃபலஸ்தீன் சிறுவர்களை கடுமையாக உடல்ரீதியான சித்திரவதைச்செய்வதாக கார்டியன் பத்திரிகை கூறுகிறது சிறையின் 36-வது ஸெல்லில் தனிமைச் சிறையில் ஃபலஸ்தீன் சிறுவர்கள் அடைக்கப்பட்டுள்ளதாக அப்பத்திரிகை கூறுகிறது. இச்சிறுவர்கள் இஸ்ரேல் ராணுவத்தினர் மற்றும்
குடியேற்ற யூதர்கள் மீது கல்வீசியதற்காக கைது செய்யப்பட்டவர்கள் ஆவர். சிறுவர்களை வாரந்தோறும் தனிமைச் சிறையில் அடைத்து கொடூரமாக தாக்குவது வழக்கமாகிவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் 500 முதல் 700 வரையிலான ஃபலஸ்தீன் சிறுவர்கள் இஸ்ரேல் ராணுவத்தால் கைது செய்யப்படுகின்றனர். பெற்றோர்கள் முன்னால் வைத்து இவர்களிடம் விசாரணை நடத்தப்படுவதில்லை. மேலும் வழக்கறிஞர்களுடன் பேசுவதற்கும் இவர்களை அனுமதிப்பதில்லை.
கை,கால்களை கட்டி நாற்காலியில் கட்டி வைத்து பல மணிநேரங்கள் ஃபலஸ்தீன் சிறுவர்களிடம் ஈவு இரக்கமற்ற இஸ்ரேல் ராணுவத்தினர் விசாரணை நடத்துகின்றனர்.
thanks to asiananban.blogspot.com

0 comments:

Post a Comment