அஹ்மதாபாத்:குஜராத் முன்னாள் அமைச்சர் ஹரேன் பாண்டியா கொலை வழக்கில் மறு விசாரணை கோரி அவரது மனைவி ஜாக்ருதி பாண்டியா தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் சி.பி.ஐக்கும், குஜராத் மோடி அரசுக்கும் அம்மாநில உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஹரேன் பாண்டியா மனைவியின் மனு மீதான விசாரணை பிப்ரவரி ஆறாம் தேதி முதல் நடைபெறும். விசாரணை துவங்குவதற்கு முன் பதிலளிக்கவேண்டும் என உயர்நீதிமன்றம் சி.பி.ஐக்கும், மோடி அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில் 12 நபர்களை கொலைக் குற்றத்தில் இருந்து டிவிசன் பெஞ்ச் நீக்கியதை தொடர்ந்து ஜாக்ருதி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சி.பி.ஐயும், குஜராத் மோடி அரசும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளன.
thanks to puthiyavoice.blogspot.com
0 comments:
Post a Comment