Monday, January 16, 2012

மைக்ரோ சாப்ட் விருது பெற்ற பாக். சிறுமி மரணம்!..

billgatesandarfakarim மைக்ரோஸாஃப்ட் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட உலகிலேயே மிகவும் வயது குறைந்த கம்ப்யூட்டர் ஃப்ரொஃபஸனல் அர்ஃபா கரீம்(வயது 16) மரணமடைந்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22-ஆம் தேதி திடீரென அர்ஃபாவுக்கு வலிப்பு நோய் ஏற்பட்டது. லாகூர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அவர் அனுமதிக்கப்பட்டார். பின்னர் டிசம்பர் மாதம் 29-ஆம் தேதி தீவிர சிகிட்சைப் பிரிவில் அவர் சேர்க்கப்பட்டார். அவரது மூளை, இதயம் ஆகியன பாதிக்கப்பட்டதால் வென்டிலேட்டரின் உதவியுடன் உயிரை பாதுகாப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் 26 நாட்கள் சிகிட்சைக்கு பிறகு
சனிக்கிழமை இரவு அர்ஃபா உயிரிழந்தார்.

ஒன்பதாவது வயதில் உலகிலேயே வயது குறைந்த கம்ப்யூட்டர் ஃப்ரஃபொஸனல் என்ற மைக்ரோஸாஃப்ட் நிறுவனத்தின் அங்கீகாரத்தை பெற்ற அர்ஃபா உலக பிரசித்திப் பெற்றார். அர்ஃபா எம்.சி.பி எனப்படும் கம்ப்யூட்டர் படிப்பை தனது 9-வது வயதில் முடித்து சாதனை படைத்தார். 

தகவல் நுட்பத்தின் வளர்ச்சியிலும், கம்ப்யூட்டர் தொடர்பான சிக்கல்களை தீர்ப்பதிலும் அநாயச திறமை பெற்றவர்களை மைக்ரோஸாஃப்ட் ஃப்ரொஃபஸனல்களாக தேர்வுச்செய்யும்.

அர்ஃபாவுக்கு அனைத்துவித மருத்துவ சிகிட்சைக்கான ஏற்பாடுகளை செய்ய மைக்ரோஸாஃப்ட் வாக்குறுதி அளித்தது. மைரோஸாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் அர்ஃபாவை அமெரிக்காவிற்கு கொண்டுவந்து சிகிட்சை அளிக்க கோரிக்கை விடுத்தபோதிலும் அவரது நோயின் காரணமாக அமெரிக்காவிற்கு கொண்டு செல்ல முடியவில்லை. 

அர்ஃபாவின் 10-வது வயதில் பில்கேட்ஸ் அவரை அமெரிக்காவிற்கு அழைத்து கெளரவித்தார். பாகிஸ்தானின் உயர்விருதான ஃபாத்திமா ஜின்னா விருது 2005-ஆம் ஆண்டு அர்ஃபாவுக்கு வழங்கப்பட்டது. இன்னும் ஏராளமான விருதுகள் அவரை தேடி வந்தன.

2006-ஆம் ஆண்டு ஸ்பெயினில் ஃபார்ஸிலோனாவில் நடந்த மைக்ரோஸாஃப்டின் தொழில்நுட்ப வல்லுநர்களின் மாநாட்டில் சிறப்புரை நிகழ்த்தி செய்திகளில் முக்கிய இடத்தை பெற்றார். இவரது மறைவிற்கு அதிபர் சர்தாரி, பிரதமர் யூசுஃப் ரஸா கிலானி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
thanks to qahtanifo.blogspot.com

0 comments:

Post a Comment