Thursday, January 12, 2012

சீனா: ஒரே ஒரு கொலையாளியைப் பிடிக்க 13 ஆயிரம் போலீஸார் மற்றும் இரண்டு ஹெலிகாப்டர்கள்.


Thirteen thousand police and two helicopters are used to capture one acquits.
சீனாவில் தொடர் கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளியை பிடிக்க 13 ஆயிரம் போலீசார் களமிறக்கப்பட்டுள்ளனர். சீனாவை சேர்ந்தவர் ஜெங் காய்குய் (42). இவர் கடந்த வாரம் கிழக்கு ஜியாங்சு மாகாணம் நான்ஜிங் நகரில், வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்த ஒருவரை சுட்டு கொன்றுவிட்டு, அவரிடம் இருந்த 31 ஆயிரம் டாலர் பணத்தை கொள்ளையடித்து தப்பினார்.
இதுதவிர மேலும் 6 கொலை மற்றும் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் அவருக்கு தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கடந்த 8 ஆண்டுகளாக போலீசுக்கு அவர் தண்ணி காட்டி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை பிடிக்க 13 ஆயிரம் போலீசார் களமிறக்கப்பட்டுள்ளனர்.
2 ஹெலிகாப்டர்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. பஸ் நிலையம், ரயில் நிலையம், கடைகள், ஓட்டல்கள் என போலீசார் சல்லடை போட்டு ஜெங்கை தேடி வருகின்றனர். ஒரு ஆளை தேடும் பணியில ஆயிரக்கணக்கான போலீசார் இறங்கியிருப்பது சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

as
thanks to thedipaar.com

0 comments:

Post a Comment