Friday, January 27, 2012

பத்மஸ்ரீ என்கிற மாயக்கண்ணாடி!

பத்மஸ்ரீ விருது இந்த விருது என்பது இந்திய அரசால் வழங்கப்படும் முதன்மை விருதுகளில் ஒன்றாகும். பத்ம விபூசன், பாரத ரத்னா, பத்ம பூசன் போன்ற விருதுகளுக்கு அடுத்து நான்காவது இடத்தில்  பத்மஸ்ரீ விருது அமைந்துள்ளது.

இது கலை, கல்வி, தொழில், இலக்கியம், அறிவியல், விளையாட்டு, சமூகசேவை, பொதுவாழ்வில் சிறப்பான பங்களித்தல் போன்றவைகளுக்காக வழங்கப்படுகிறது. இந்த விருது 1954  ஜனவரி 2 நாள் இந்திய ஜனாதிபதியால் ஏற்ப்படுத்தப்பட்டது.

இது ஒன்றும் அப்படியே நூறு சதவீதம் திறமை உள்ளவர்களுக்கு வழங்கப்படுவதாக எண்ணிவிட வேண்டாம். இது ஆளும் வர்க்கத்திற்கும், அரசு துதிபாடுபவர்களுக்கும், அரசியல் செல்வாக்கு உள்ளவர்களுக்கும், பெரும் செல்வந்தர்களுக்கும், சினிமா கூத்தாடிகளுக்கும் கொடுக்கப்படும் ஒரு விருதே தவிர வேறொன்றும் இல்லை.

ஒருபக்கம் பசி, வறுமையால் தற்கொலை சாவுகள்! மறுபக்கம்  உயர்குடிகளுக்கு இதுபோல் சாதனை பூச்செண்டுகள். வறுமையில் வாடும் மக்களை கவனியுங்கள் என்று சொன்னால் குடியரசு தினம் நடத்துகிறோம், ராக்கெட்டு பறக்க விடுகிறோம், விமானத்தில் சாகசம் காட்டுகிறோம், பத்மஸ்ரீ விருது வழங்குகிறோம் பாருங்கள் என்று சொல்கிறார்கள். பசிக்கும் வயிறோடு இதையெல்லாம் பார்த்து விட்டு பட்டினியில் சாகுங்கள் என்று சொல்கிறார்கள்.

மக்கள் சமூக உரிமைக் கழகத்தின் (பியுசிஎல்) அமைப்பில் உள்ள டாக்டர் பினாயக் சென். இவரை நீங்கள்  மறந்திருக்கலாம். இவர்தான்  சத்தீஸ்கர் மாநில பழங்குடியின மக்களுக்கு கிராமம்தோறும் சென்று மருத்துவம் செய்து வந்தவர்இவருக்குத்தான் சத்தீஸ்கர் நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கியது. இந்த பழங்குடிமக்கள் வாழும் மலைகளில் இருந்துதான் இந்திய அரசு கனிமவளங்களை எடுக்க உள்நாட்டு யூத்தம் செய்துவருகிறது. இவரைப்போல் ஏழை, எளிய மக்களுக்கு சேவைகள் செய்யும் எத்தனையோ நல்ல உள்ளங்கள் இருக்கின்றன. அவர்களுக்கு எல்லாம் விருதுகள் கிடையாது.

ஆனால் மக்கள் சேவை செய்யாத, சேவை நோக்கம் இல்லாத மருத்துவர்களுக்கும்,  நாதஸ்வர வித்வான், மிருதங்க வித்வான், வயலின் வித்வான், நடிகை, நடிகர்கள், தொழில் அதிபர்கள்இவர்களைத்தான் இந்த விருது சென்றடையும். இவர்கள் ஏற்கனவே பெரும் பணமும், புகழும் சம்பாதித்து வாழ்க்கையை வளமோடும், செல்வ செழிப்போடும் வாழ்பவர்கள். இவர்களுக்கு இந்த விருதுகளை வழங்குவதால் என்ன பிரோஜனம் இருக்கிறது. ஏழை, எளிய மக்களில் திறமை உள்ளவர்களுக்கு, சேவை மனப்பான்மை உள்ளவர்களுக்கு விருது கொடுத்து உதவி செய்து கவுரவிப்பதே ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு  உறுதுணையாக அமையமுடியும்.

இந்தியாவில் நரோரா என்ற இடத்தில் உள்ள அணு உலையில் ஒரு தீவிபத்து நடக்கிறதுஅதை அதன் ஊழியர்கள் நான்குபேர் தங்கள் உயிரை பணயம் வைத்து அணைக்கின்றனர். இவர்களுக்கு எந்த விருதும் வழங்கப்படவில்லைஇதே போல் ஒரு விபத்து அமெரிக்காவில் நடக்கிறது அதை சரி செய்த ஒருவருக்கு அமெரிக்க சுதந்திர தினத்தில் அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்படுகிறது. ஆனால் நமது பத்மஸ்ரீ விருதுகளால்  லிவிங் டுகெதர் (Living together) என்பதை தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தி வைத்த மாமேதை கமல்ஹாசன் போன்றவர்களைத்தான் சென்றடைய முடிந்துள்ளது என்பதை நினைத்து நாம் பெருமைபட்டுக்கொள்ள வேண்டும்.

மொத்தத்தில் நமது டாக்டர் பட்டங்கள் எப்படி ரவுடிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும், பணக்காரர்களுக்கும் காற்றில் பறக்கவிடும் பட்டமாக ஆகிவிட்டதோ அதுபோல் தான் இதுவும். இதில் ஒரு ஆறுதலான செய்தி என்னவென்றால் புச்சேரி வேங்கடபதி என்ற  விவசாயிக்கு இந்தவருடம் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது என்பதே.
*மலர்விழி*    

0 comments:

Post a Comment