Thursday, January 19, 2012

அடிப்படையற்ற, ரசனையற்ற, யோக்கியமற்ற செய்திகளை வெளியிடும், "தினமலம்' - தினமலர் நாளிதளை கேவலமாக விமர்சித்த அணு எதிர்ப்பாளர்களின் தலைவர் உதயகுமார் ?



தமிழக தொழில் துறைகள் நசிந்து போகும் அளவு, மின் பிரச்னை இங்கே தலைவிரித்தாடுகையில், மின் தேவையை பூர்த்தி செய்ய உதவும், கூடங்குளம் அணு உலையை செயல்பட விடாமல், சிலர் தடுக்கின்றனர். 
இந்த எதிர்ப்பாளர்களுடன் தொடர்புடைய தொண்டு நிறுவனங்களுக்கு, வெளிநாட்டிலிருந்து, 54 கோடி ரூபாய் நன்கொடை வந்ததைக் கண்டுபிடித்துள்ளதாக, மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார். இச்செய்தி, "தினமலர்' நாளிதழில் வெளியானது.


இச்செய்தியை யாரும், "சீரியசாக' எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று கூறும், அணு எதிர்ப்பாளர்களின் தலைவராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் உதயகுமார், "தினமலர்' நாளிதழுக்கு, ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: அடிப்படையற்ற, ரசனையற்ற, யோக்கியமற்ற செய்திகளை வெளியிடும், "தினமலம்' கருத்துத்தாளை (வியூஸ்பேப்பர்), அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் கண்டிக்கிறது. கொள்கையற்ற, ஒழுக்கமற்ற, பத்திரிகை தர்மம் அற்ற இந்த மஞ்சள் பத்திரிகை, தமிழ் மக்களின் உரிமைக்கும், மதிப்புக்கும் எதிராக செயல்படுகிறது. "அணுஉலை எதிர்ப்பாளர்களுக்கு வெளிநாட்டுப் பணம் வந்தது எப்படி?' என்ற தலைப்பில், இந்த, உபயோகமற்ற, கருத்துத்தாள், செய்தி வெளியிட்டுள்ளது. அதில், எங்களுடன் தொடர்பு வைத்துள்ள சில கிறிஸ்துவ தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு, அமெரிக்காவிலிருந்து, 54 கோடி ரூபாய் நிதி உதவி வந்துள்ளதாகக் கூறியுள்ளது. இந்த, மூளையற்ற, முதுகெலும்பற்ற, "வியூஸ்பேப்பர்' அசிங்கமான, அபத்தமான கண்டுபிடிப்புகளுக்கு ஆதாரம் எதுவும் தரவில்லை. அறிவுள்ள, பண்புள்ள எவரும், இந்த, நாற்றமெடுக்கும் பத்திரிகை செய்தியை, "சீரியசாக' எடுத்துக் கொள்ள மாட்டார்கள். எங்கள் இயக்கத்தின், மூன்று முக்கிய இயக்கவாதிகளின் வீட்டு முகவரி, வீட்டு தொலைபேசி எண், மொபைல் எண், இ-மெயில் முகவரி ஆகியவற்றை, 2011, நவம்பர் 24ம் தேதி, இந்தப் பத்திரிகை, முதல் பக்கத்தில் செய்தியாக வெளியிட்டது. இதன் மூலம், இயக்கத்தின் உறுப்பினர்களையும், அவர்கள் வீட்டு உறுப்பினர்களையும் தொந்தரவு செய்து, மிரட்டுவதற்காக தன் வாசகர்களைத் தூண்டிவிட்டுள்ளது. இதை எதிர்த்து, பிரெஸ் கவுன்சில் ஆப் இந்தியா, தமிழ்நாடு மாநில மனித உரிமை கமிஷன் மற்றும் தேசிய மனித உரிமை கமிஷன் ஆகியவற்றிடம், இயக்கத்தின் சார்பில் புகார் கொடுத்து, இந்த நாளிதழ் செய்திகளை தினமும், "எடிட்' செய்து, அச்சிட்டு, வெளியிடுவோர் மீது, சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. இப்போது, இந்த நாளிதழ், புகழ் பெற்ற கிறிஸ்துவ தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பெயரை வெளியிட்டு, மேலும் விஷத்தைக் கக்கி, வாந்தி எடுத்துள்ளது. இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரின் இ-மெயில் முகவரியையும் வெளியிட்டுள்ளது. வெட்கமற்ற, சர்ச்சைக்குரிய, இந்த பத்திரிகை நிறுவனம், மனசாட்சி இன்றி, வேறு சிலரின் தூண்டுதல் பேரிலும், லாப நோக்கத்திலும் செயல்படுகிறது. தமிழ் மக்களின் உணர்வுகளையும், நம்பிக்கைகளையும், உரிமைகளையும் அவமதிக்கும் இந்த, "தினமலத்தை' நாங்கள் கண்டிக்கிறோம். கிறிஸ்துவர்கள், அவர்களின் இயக்கங்கள், மற்ற சிறுபான்மை மதத்தினரின் நலனுக்கு எதிராகச் செயல்படும், இந்த, "தினமலத்தின்' எதேச்சாதிகாரப் போக்கையும் நாங்கள் கண்டிக்கிறோம். அணுசக்தி போன்ற அபாயகரமான, ஆபத்து விளைவிக்கக் கூடிய இந்த பத்திரிகையின் வெளியீடுகளை, தமிழ் மக்கள் அனைவரும் புறக்கணிக்குமாறு கோருகிறோம். இந்த, "தினமலத்தை' போல அல்லாமல், அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம், ஒரு சில காந்தீயக் கொள்கைகளுடன் இயங்கி வருகிறது. எந்த இந்திய அல்லது சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடமிருந்தும் நாங்கள் எந்த நிதியும் வாங்கவில்லை.

- போராட்டக் குழு, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம். இவ்வாறு அந்த இ-மெயிலில் எழுதப்பட்டுள்ளது.

உதயகுமாரிடம் பேச விரும்புவோர், அவரின், "மொபைல்' எண்: 98656-83735, 98421-54073, மற்றும் "இ-மெயில்' முகவரி: koodankulam@yahoo.com யில் தொடர்பு கொள்ளலாம்.
thanks to gnanamuthu.com

0 comments:

Post a Comment