Thursday, January 19, 2012

ராணி எலிசபெத்துக்கு புதிய கப்பல் கட்ட பிரிட்டன் அரசு முடிவு!..

ராணி எலிசபெத்தின் வைர விழா நினைவு!...
பிரித்தானிய ராணி எலிசபெத்தின் வைர விழா நினைவாக ராணி பெயரில் புதிய கப்பலை தயாரித்து வழங்க பிரித்தானிய அரசு முடிவு செய்துள்ளது.
இக்கப்பல் தயாரிப்புக்கான செலவுகளுக்கு The Daily Mail மூலமாக பிரசாரம் தொடங்கியுள்ளது. இளவரசர் சார்லஸ் மற்றும் இளவரசி ஆனியின் ஆதரவும் இத்திட்டத்திற்கு உதவியாக உள்ளது.

உலகின் மிகப்பெரிய கப்பலாக 600 அடி நீளத்தில் உருவாக உள்ள இக்கப்பலின் கட்டுமான செலவுக்காக சுமார் 80 மில்லியன் பவுண்டுகள் தேவைப்படுகின்றது.

இந்த கப்பலில் அரச குடும்பத்தார்களின் பயன்பாட்டுக்காக தனி அறைகளும், இவை தவிர பெரிய கண்காட்சி அரங்கும் அமைக்கப்பட உள்ளது. மேலும் 220 நபர்கள் தங்கும் வகையில் அறைகளும் கட்டப்பட உள்ளது.

வர்த்தகம் மற்றும் தொழில் நிகழ்ச்சிகள் நடைபெறத் தேவையான வசதிகளை இக்கப்பல் கொண்டிருக்கும். இளைஞர்கள் அறிவியல் கல்வியும், பயிற்சியும் பெற உதவியாக விளங்கும்.

ராணி எலிசபெத் அரச பதவி ஏற்று அறுபது ஆண்டுகள் நிறைவு பெற்றதைக் குறிக்கும் வகையில் இந்த கப்பல் பிரம்மாண்டமாக விளங்கும். ஆனால் மக்களின் வரிப்பணம் இதற்காக செலவழிக்கப்படாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

ராணி எலிசபெத்துக்கு குடிமக்கள் தங்கள் அன்பையும், மரியாதையையும் காட்டும் வகையில் அவர்கள் பணம் திரட்டி இந்தக் கப்பலை தயாரித்து அரசிக்கு அன்பு பரிசாக வழங்கும் திட்டமிட்டுள்ளனர்.

பிரித்தானியாவின் பெரும் பணக்காரர்கள், நிறுவனங்களிடம் அன்பளிப்பு வசூலிக்கப்படும் என்றும் கண்காட்சிகள் நடத்தி பொருள் திரட்டப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளன.

0 comments:

Post a Comment