Sunday, January 22, 2012

Kotak..கேமரா நிறுவனம் திவால்!...

அமெரிக்காவின் கோடக் நிறுவனம் புகைப்படக் கருவி(Camera) மற்றும் படச் சுருள்(Film Role) ஆகியவற்றில் உலகப் புகழ் பெற்றது.

சந்திரனில் நீல் ஆர்ம்ஸ்டாங் கால்பதித்த காட்சியை வெளியிட, இந்த நிறுவன படச் சுருள் உதவி, வரலாற்றில் இடம் பெற்றது. 131 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த நிறுவனம், மோசமான நிர்வாகம், போட்டியாளர்களைச் சமாளிக்க முடியாமை ஆகிய காரணங்களால், 2003 முதல் சிறிது சிறிதாக நலிவடைந்தது. 
இதனையடுத்து கடந்த 2003 முதல், இதுவரை, தனது 13 படச் சுருள் மற்றும் புகைப்படக் கருவி தயாரிப்பு நிலையங்களை மூடிய இந்நிறுவனம், 47 ஆயிரம் ஊழியர்களையும் வீட்டுக்கு அனுப்பியது.

இந்நிலையில் இந்நிறுவனம் அமெரிக்க அரசிடம் திவால் நோட்டீஸ்(சாப்டர் 11) சமர்ப்பித்துள்ளது. இதன் மூலம் நிறுவனங்கள் தனிநபர்களிடம் வாங்கிய கடனை இந்நிறுவனம் சிறிது கால அவகாசம் எடுத்துக் கொண்டு மெல்ல மெல்ல செலுத்தும்.Eastman Kodak Inches Toward
thanks to qahtaninfo.blogspot.com

0 comments:

Post a Comment