Monday, January 23, 2012

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமாவை எதிர்க்கும் வேட்பாளராக ஜின்கிரீச் தேர்வு !


அமெரிக்காவில் அதிபர் பதவிக்கான தேர்தல் வருகிற நவம்பர் 6-ந்தேதி நடக்கிறது. அதில், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஒபாமா மீண்டும் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. மாகாண அளவில் நடைபெறும் தேர்தலில் குடியரசு கட்சியின் பிரதிநிதிகள் ஓட்டு போட்டு வேட்பாளரை தேர்ந்தெடுத்து வருகின்றனர்.  
 
தெற்கு கரோலினா மாகாணத்தில் வேட்பாளருக்கான தேர்தல் நேற்று நடந்தது. அதில் மிட் ரோம்னி, நியூட்கின் கிரீச், ரிக்சாண்டோரம், ரோன்பால் ஆகியோர் போட்டியிட்டனர். அதை தொடர்ந்து தீவிர பிரசாரத்துக்கு பிறகு ஓட்டு பதிவு நடந்தது. அதை தொடர்ந்து ஓட்டு எண்ணிக்கை நடந்தது. 70 சதவீதம் ஓட்டுகள் எண்ணப்பட்ட நிலையில் ஜின்கிரீச் வெற்றி பெற்றார். அவர் 40 சதவீதம் ஓட்டுகளை பெற்றிருந்தார்.  
 
அவருக்கு அடுத்தபடியாக மிட்ரோம்னி 2-வது இடம் பெற்றார். அவருக்கு 28 சதவீதம் ஓட்டுகள் கிடைத்தது. ரிக்சாண்ட்ரோம் 18 சதவீதமும், ரோன்பால் 13 சதவீதம் ஓட்டுகளும் பெற்றனர். இதுவரை நடந்த தேர்தல்களில் மிட் ரோம்னி வெற்றி பெற்று முன்னிலையில் இருந்தார். ஆனால் தெற்கு கரோலினாவில் ஜின்கிரீச் வெற்றி பெற்றுள்ளார். இது ரோம்னிக்கு சிறிது பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாக கருதப்படுகிறது.
 
ஆனால் அதை அவர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. வர இருக்கின்ற மற்ற மாகாண தேர்தல்களில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஏனெனில் கடந்த 1980-ம் ஆண்டு முதல் நடைபெறும் வேட்பாளர் தேர்வு போட்டியில் தெற்கு கரோலினாவில் ஜின்கிரீச்தான் வெற்றி பெற்று வந்துள்ளார்.
thanks to asiananban.blogspot.com

0 comments:

Post a Comment