Sunday, January 22, 2012

அமெரிக்காவில் மனநலபாதிப்பு உடையவர்கள் அதிகம்!

அமெரிக்காவில் வசிக்கும் 5 பேரில் ஒருவருக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் அந்நாட்டின் மனநல சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 


ஏறத்தாழ ஐந்து கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளர்கள், இதில் 23 சதவிகிதம் பேர் பெண்கள் 16.8 சதவிகிதம் பேர்  இளைஞர்கள் ஆவர்,அதிலும் 50 வயது கடந்தவர்களை விட இளைஞர்கள் தான் இரண்டு மடங்கு அதிகம் என்றும் சுமார் 1 கோடியே 14 லட்சம் இளைஞர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், 12 வயது முதல் 17 வயது வரையில் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 19 லட்சம் என்றும் இந்த தகவல் தெரிவிக்கிறது. 



மேலும் 87 லட்சம் இளைஞர்கள் கடந்த ஆண்டுகளில் தற்கொலை திட்டம் குறித்து மோசமான நினைப்புக்கு ஆளானார்கள், இவர்களில் 25 லட்சம் பேர் தற்கொலைக்கு திட்டமிட்டுள்ளனர். 11 லட்சம் பேர் தற்கொலை முயற்சிகளிலும் ஈடுபட்டனர். மன உளைச்சலில் இருந்து மீள முடியாத தன்மை மற்றும் போதைப் பழக்கத்தின் அடிமை ஆகியவற்றால் தான் பெரும்பான்மையான இளைஞர்கள் பாதிக்கபடுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்ல, இந்த ஆய்வின் படி 12 வயது முதல் முதியவர் வரையில் 67,500 பேர் சிறைச்சாலைகளில் இருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. 

0 comments:

Post a Comment