தேர்தல் ஆணையத்தின் மீது தமது அமைச்சகத்தின் கட்டுப்பாட்டைச் செலுத்த முற்படுவதாக, சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்துக்கு எதிராக பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி இன்று புகார் அளித்தார்.
அண்மையில் குர்ஷித் அளித்த தொலைக்காட்சி பேட்டி ஒன்றில், தேர்தல் ஆணையமும் ஒரு சில வகையில் சட்ட அமைச்சகத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது என்ற தொனியில் பேட்டி அளித்திருந்தார்.
சிபிஐ-யை லோக்பால் வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்ற அண்ணா ஹஜாரே குழுவின் கோரிக்கை தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், நாட்டில் எந்த அமைப்புமே தன்னிச்சையானது என்று சட்ட அமைச்சர் குர்ஷித் கூறியிருந்தார்.
குர்ஷித்தின் இந்தக் கருத்து தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் குரேஷி புகார் மனு அளித்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
தனிப்பட்ட முறையிலான விஷயம் ஏதுமில்லை; இது, அமைப்பு ரீதியிலான விவகாரம் என்று நிருபர்களிடம் குரேஷி தெரிவித்தார்.
சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் இரண்டாவது முறையாக தேர்தல் ஆணையத்தின் 'கவனிப்பை'ப் பெற்றுள்ளார்.
முன்னதாக, இஸ்லாமியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதாக பிரசாரத்தின்போது அளித்த உறுதிமொழி தொடர்பாக, விளக்கம் கேட்டு, சல்மான் குர்ஷித்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
as
thanks to thedipaar.com
0 comments:
Post a Comment