Saturday, January 28, 2012
நியுயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தின் கடிதங்கள் மற்றும் ஆவணங்கள் பிரிவிலிருந்து கொக்கைன் எனப்படும் ஒரு தொகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ இலட்சினை பொறிக்கப்பட்ட பை ஒன்றிலிருந்து 16 கிலோகிராம் கொக்கைன் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்தப் பையில் பெயர் விபரங்கள் பொறிக்கப்படாதபோதிலும் மெக்சிக்கோவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இருப்பினும் இந்தப் பை தவறுதாலாக ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.thanks to qahtan.blogspot.com
0 comments:
Post a Comment