Tuesday, January 10, 2012

லண்டன்: கிரகாம்பெல் கடிதத்தை ஏலத்தில் எடுக்க கடும்போட்டி.


தொலைபேசியின் பயன்பாடு குறித்த விளக்கப் படத்துடன் அலெக்சாண்டர் கிரகாம் பெல் எழுதிய அபூர்வ கடிதம் ஏலத்துக்கு வருகிறது.

உலகில் இன்று தொலை தொடர்பு துறை மிக வேகமாக முன்னேறி வருகிறது. இன்றைய நவீன தொலை தொடர்பு மற்றும் அதுசார்ந்த கண்டுபிடிப்புகளுக்கு முழு முதல் காரணகர்த்தாவாக விளங்கியவர் அலெக்சாண்டர் கிரகாம் பெல். இவர், தனது உதவியாளர் தாமஸ் ஏ.வாட்சன் என்பவரின் உதவியுடன் முதல் தொலைபேசியை கண்டுபிடித்தார்.

அந்த காலத்தில், தொலைபேசியை எவ்வாறு பயன்படுத்துவது என்று விளக்கி அதன் செயல்பாடுகள் குறித்த படம் வரைந்து, ஒரு கடிதத்தை அவரது பெற்றோருக்கு அனுப்பினார். அவரின் கைப்பட எழுதிய 8 பக்கம் கொண்ட அந்த கடிதம் 1878ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி வாஷிங்டனில் இருந்து அனுப்பப்பட்டது.

அந்த காலத்து தொலைபேசி வயர்களில் மின்னல் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், அது பயன்படுத்துவோரை தாக்கலாம் என்றும் பெல் கடிதத்தில் கூறியிருக்கிறார். ஆனால், முறையான பாதுகாப்பு ஏற்பாடு செய்து கொண்டால் அச்சப்படத் தேவையில்லை என்று அதை எப்படி மேற்கொள்வது என்பதை ஆழமாகவும், மிக தெளிவாகவும் படம் வரைந்து குறிப்பிட்டிருந்தார் கிரகாம் பெல்.

 கிரகாம் பெல் எழுதிய மிகவும் அரிதான அந்த கடிதம் விரைவில் ஏலம் விடப்படுகிறது. அதை நியூ ஹம்ஷையரை சேர்ந்த ஆர்.ஆர். அமைப்பு ஏலம் விடுகிறது. கிரகாம் பெல்லின் கடிதத்தை வாங்க கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.


as
thanks to thedipaar.com

0 comments:

Post a Comment