Tuesday, January 10, 2012

ரூ.2851 கோடிக்கு ஊழல் செய்த 250 அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை. சீன அரசு அதிரடி.


 சீனாவில் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகள் ரூ.2851 கோடிக்கு மேல் ஊழலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக 36 மூத்த அதிகாரிகள் உள்பட 250 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.  சீனா முழுவதும் கடந்த ஆண்டு 26,000 அதிகாரிகளின் வருமானக் கணக்கு குறித்து தணிக்கை நடைபெற்றது.
அப்போது அவர்கள் வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்து சேர்த்திருந்தது தெரியவந்தது. நாட்டின் பொருளாதார விதிமுறையை மீறி அவர்கள் ஊழலில் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  இதைத்தொடர்ந்து ஊழலில் ஈடுபட்டது தொடர்பான ஆவணங்கள் உரிய நடவடிக்கைக்காக நீதித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அந்த ஆவணங்கள் குறித்து நீதித்துறை தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. ஊழல் அதிகாரிகள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் அந்நாட்டு அரசு முனைப்பாக உள்ளது. ஊழலில் ஈடுபட்டுள்ள மூத்த அதிகாரிகளான 36 பேரும் ஆளுங்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் ஆவர். இருப்பினும் அவர்களை தண்டிக்க வேண்டும் என்பதில் சீன அரசு உறுதியாக உள்ளது.


as
thanks to thedipaar.com

0 comments:

Post a Comment