தென் சீன கடலில், தனது எல்லைக்குட்பட்ட பகுதியில், சீன கப்பல்கள் அத்துமீறி நுழைந்ததற்கு, பிலிப்பைன்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தென் சீன கடலில், பிற நாடுகளின் உரிமைக்குட்பட்ட பகுதிகளைக் கூட, சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது.
இந்நிலையில், கடந்தாண்டு டிசம்பர், 11 மற்றும் 12 தேதிகளில், தென் சீன கடலில், பிலிப்பைன்ஸ் எல்லைக்குட்பட்ட பகுதியான, சபினா ÷ஷாவால் என்ற இடத்தில், சீன கடற்படை கப்பல் ஒன்றும், வேறு இரு கப்பல்களும் நுழைந்தன.
இந்த மூன்று கப்பல்களும், பிலிப்பைன்ஸ் எல்லையை விட்டு வெளியேறும்வரை ஒரு தூரத்தில் இருந்து, பிலிப்பைன்ஸ் கடற்படை ரோந்து கப்பல், இவற்றை கண்காணித்ததாக மண்டல ராணுவத் தளபதி, ஜூவான்சோ சாபான் தெரிவித்தார்.
பிலிப்பைன்ஸ் வெளியுறவுச் செயலர், அல்பர்ட்டோ டெல் ரொசாரியோ வெளியிட்ட அறிக்கையில், பிலிப்பைன்ஸ் அரசு, இதுகுறித்து தனது கவலையைத் தெரிவித்துள்ளதாகக் கூறினார். இந்த அத்துமீறல், சீனாவுக்கும், தெற்காசிய நாடுகளுக்கும் இடையிலான, 2002 ஒப்பந்தத்தை மீறிய செயல் என்றும், அவர் குறிப்பிட்டார்.
thanks to thedipaar.com
0 comments:
Post a Comment