Friday, December 9, 2011

நல்லவர்கள் போல் தீயவர்களும் உலாவும் இடம் இணையத்தளம்!


கனம் நீதிபதி அவர்களே, விவாகரத்துப் பெறப்போகும் எனது கட்சிக்காரரின் பேஸ்புக் கடவுச் சொல்லை (பாஸ்வேட்) உட னடியாக வழங்கிட அவரது மனைவிக்கு உத்தரவிட வேண்டும் என்று நீதி மன்றத்தில் வாதாடுகிறார் ஒரு வழக்குரைஞர்.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதியும், கடவுச் சொல்லை ஒப்ப டைக்கும்படி ஆணையிடுகிறார். இது வெறும் கற்பனை என்று நினைத்து விடாதீர்கள். உண்மையிலேயே இப் படியொரு விசித்திரமான வழக்கு அமெரிக்காவில் நடந்தது. நமது நாட் டிலும் இது போன்ற வழக்குகளையும், தீர்ப்புகளையும் பார்க்கப்போகும் நாள் வெகு தொலைவில் இல்லை.
சொல்லப் போனால், வருங்காலத்தில் நீதிமன்றங்கள் சந்திக்கப் போகும் பெரும்பாலான வழக்குகள் ஏதாவது ஒரு வகையில் சமூக வலைத்தளங்கள், மின்னஞ்சல்கள், வங்கி இணையக் கணக்குகள் போன்றவற்றின் கடவுச் சொல்லையும் உள்ளடக்கியதாகவே இருக்கப் போகின்றன. அந்த அளவுக்கு மக்களின் இணைய நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெற்றுக் கொண்டி ருக்கின்றன.
JO.
thedipaar.com

0 comments:

Post a Comment