Monday, January 9, 2012

புதிய இடத்தில் யுரேனியம் தயாரிக்கும் பணியை தொடங்கியது ஈரான்.


அணு சக்தி எரிபொருள், மற்றும் அணு ஆயுதங்களை தயாரிக்க உதவும் செறிவூட்டிய யுரேனியம் தயாரிக்கும் நடவடிக்கையை புதிய மையத்தில் தொடங்கியுள்ளது ஈரான். இது பற்றிய தகவலை ஈரான் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

 யுரேனியத்தை செறிவூட்டும் புதிய மையம் தரைக்கடியில் யாருக்கும் தெரியாத இடத்தில் செயல்படுகிறது. எனவே வெளிநாடுகள் தாக்கக்ககூடும் என்கிற ஆபத்து வராது என கருதப்படுகிறது.

 ஈரானின் புனித நகரான கோம் என்ற இடத்துக்கு அருகே ராணுவ வளாகம் அமைந்துள்ள பகுதியான போர்டோ என்ற இடத்தில் இந்த புதிய மையம் செயல்படுகிறது. இந்த மையத்துக்கு யுரேனியம் நிரப்பப்பட்டுள்ளது என ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா கமேனியின் பிரதிநிதி மேலாளராக உள்ள கேகான் பத்திரிகை முதல் பக்க செய்தியாக வெளியிட்டுள்ளது.

 ஆயினும், ஈரான் அணு சக்தி துறையின் தலைவர் பெரைதூன் அபாசி, போர்டோவில் யுரேனியம் செறிவூட்டல் பணி விரைவில் தொடங்கும் என சனிக்கிழமை தெரிவித்த செய்தியும் கேகான் பத்திரிகை வெளியிட்ட செய்தியும் முரண்பாடாக உள்ளது.

 ஈரானிடம் ஏற்கெனவே நடான்ஸ் என்ற இடத்தில் யுரேனியம் செறிவூட்டல் மையம் உள்ளது. இது மிகப் பெரிய மையமாகும். ஆனால் போர்டோ பகுதியில் அமைந்துள்ள மையம் புதிய தொழில்நுட்பத்தில் இயங்குகிறது என்பதோடு அல்லாமல் வெளிநாடுகள் எளிதாக தாக்கிவிடமுடியாத ஒரு இடமாகும். போர்டோ மையம் ரகசியமாக பல காலமாக இயங்கிவந்த நிலையில் 2009 செப்டம்பரில் மேலைநாடுகள் இதுபற்றி தெரிந்துகொண்டு அம்பலப்படுத்தின. அதைத்தொடர்ந்தே ஈரான் இந்த மையம் செயல்படுவது பற்றி ஒப்புக்கொண்டது.

 அணு ஆயுதங்கள் தயாரிக்கவும், அணுசக்திக்கான எரிபொருளாகவும் பயன்படக்கூடியது செறிவூட்டிய யுரேனியம். எனவே மேலை நாடுகள் இதுபற்றி எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், மருத்துவத் தேவைக்காகவும், அணு மின்சக்தி தயாரிக்கவுமே செறிவூட்டிய யுரேனியத்தை தயாரிப்பதாக ஈரான் கூறிவருகிறது. இதை மேலை நாடுகள் ஏற்காமல் இருந்துவருகின்றன.


as
thanks to thedipaar.com

0 comments:

Post a Comment