Thursday, January 12, 2012

இஸ்ரேலிய பெண் பாராளுமன்ற உறுப்பினரின் அராஜகம்


இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஒரு வாக்குவாதத்தில் கோபமுற்ற இஸ்ரேலிய பெண் நாடாளுமன்ற உறுப்பினர் அரபு நாடாளுமன்ற உறுப்பினர் மீது தண்ணீரை ஊற்றிய மோசமான சம்பவம் நடைபெற்றுள்ளது.

இஸ்ரேலிய நாடாளுமன்றமான நெஸ்ஸட்டில் தீவிர வலது சாரி கட்சியான இஸ்ரேல் பெய்தெனுவைச் சார்ந்தவர் அனஸ்தஸியா மிக்கேலி என்ற பெண். இவர் மாடலிங் துறையில் இருந்து பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனவர். நாடாளுமன்றத்தில் அரபு பள்ளிக்கூடம் ஒன்று மனித உரிமை பேரணியில் கலந்து கொள்வது பற்றி விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது தொழிலாளர் கட்சியைச் சார்ந்த அரபு இனத்தவரான காலிப் மஜ்தலே உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அடிக்கடி அவரைப் பேசவிடாமல் குறுக்கிட்டுக் கொண்டிருந்தார் மிக்கேலி். இதனால் மஜ்தலே, "வாயை மூடு" என மிக்கேலியைப் பார்த்துக் கூறினார். இதனால் வெகுண்டெழுந்த மிக்கேலி, மஜ்தலேயை நெருங்கி கோப்பையில் இருந்த தண்ணீரை அவர் மீது வீசினார்.

வீசிவிட்டு வேகமாக வெளியேறிய மிக்கேலியைப் பார்த்து புன்னகைத்த மஜ்தலே "இது ஒன்றே அனைத்தையும் தெளிவுபடுத்துகிறது" என தெரிவித்தார்.
மிக்கேலி என்ற இந்த உறுப்பினர், "முஸ்லிம்கள் தொழுகைக்கு அழைப்பு விடுப்பது ஒலி மாசினை ஏற்படுத்துகிறது" எனக் கூறி, "ஒலியின் அளவினைக் குறைக்க வேண்டும்" என சட்டமியற்ற முயற்சி செய்தவர். "இனவெறி மற்றும் பாகுபாடு அடிப்படையில் இந்தக் கருத்தை இவர் கூறுகிறார்" என்ற குற்றச்சாட்டும் அப்போது  இவர் மீது வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
thanks to yarlmuslim and inneram.com

0 comments:

Post a Comment