Tuesday, January 10, 2012

யேமன் ஜனாதிபதி அலி அப்துல்லா தப்புகிறார்


ஏமனில் அதிபர் அலி அப்துல்லா சலே மற்றும் அவரது ஆட்சியில் பணியாற்றிய அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவர் மீதும், குற்றவியல் வழக்குகளைத் தொடுப்பதைத் தடுக்கும் அரசியல் பாதுகாப்பை வழங்க அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஏமனில் கடந்த 33 ஆண்டுகளாக சலே அதிபராக இருந்தார். கடந்தாண்டில் எகிப்தின் தொடர்ச்சியாக ஏமனில் ஏற்பட்ட மக்கள் புரட்சியால், அவர் பதவி விலக வேண்டும் என எதிர்ப்பு எழுந்தது. தன் மீது எவ்வித வழக்குகளும் தொடுக்கப்படக் கூடாது என உறுதியளித்தால் தான் விலகுவதாகக் கூறினார்.

வளைகுடா நாடுகள் கூட்டுறவு கவுன்சில் அளித்த ஒப்பந்தப்படி, சலே, அவரது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் என அனைவர் மீதும் எதிர் காலத்தில் எவ்வித குற்றவியல் வழக்குகளும் தொடுக்கப்பட மாட்டாது என உறுதியளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், சலே பதவி விலகினார். ஆனால், மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதிபர் ஆதரவு ராணுவத்திற்கும் எதிர்ப்பு ராணுவத்திற்கும் இடையில் மோதல் தொடர்கிறது.

இந்நிலையில், சலே, அவரது குடும்பம், அவரது 33 ஆண்டுக்கால ஆட்சியில் அரசு, ராணுவம் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களில் பணியாற்றிய எவர் மீதும் எதிர் காலத்தில் குற்றவியல் வழக்குகள் தொடுக்கப்பட மாட்டாது என்ற புதிய சட்டத்திற்கு நேற்று முன்தினம் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
thanks to yarlmuslim

0 comments:

Post a Comment