பிரான்ஸில் ப்றிபொக்ஸ் என அழைக்கப்படும் தொலைத்தொடர்பு சேவையை வழங்கும் நிறுவனம் இந்த ஆண்டு மேலும் சலுகைகளை வழங்கும் புதிய சேவை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த நிறுவனம் வழங்கும் வீட்டுத்தொலைபேசியிலிருந்து பிரான்ஸிற்கும் ஏனைய 40க்கு மேற்பட்ட நாடுகளுக்கும் இலவசமாக பேசும் வசதி இதுவரை இருந்து வந்தது. தற்போது கைத்தொலைபேசிக்கும் இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது.
ப்றிபொக்ஸ் நிறுவனத்தின் ஊடாக வீட்டுத்தொலைபேசியை வைத்திருப்பவர்கள் மாதம் 15.90 ஈரோவை செலுத்தி இக்கைத்தொலைபேசி சேவையை பெற முடியும்.
பிரான்ஸிலிருந்து வீட்டுத்தொலைபேசிகளிலிருந்து மணிக்கணக்காக பேசியவர்கள் இனி போகும் இடமெல்லாம் கைத்தொலைபேசியிலும் மணிக்கணக்காக பேசப்போகிறார்கள்.
thanks to yarlmuslim
0 comments:
Post a Comment