Monday, January 9, 2012

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சலுகைகள் வழங்கப்படும்: பிரதமர் உறுதி


வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் மற்றும் காப்பீட்டு திட்டம் வழங்கப்பட உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்துள்ளார்.
இந்தயாவில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று (8.1.2012) தொடங்கிய வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பிரதமர் கூறியதாவது, வெளிநாடு வாழ் இந்திய தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதிய தொகை மற்றும் காப்பீட்டு திட்டம் தொடங்கப்படும்.
வெளிநாடுகளில் வேலை செய்து நாடு திரும்பும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். மேலும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை, அவர்களின் பாதுகாப்பிற்கு தேவையான பல்வேறு நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் வாழும் இந்திய சமூக மக்களின் நலனுக்காக இந்திய அரசும், இந்திய மக்களும் பெருமளவில் பங்காற்றி வருகின்றனர். அதே சமயத்தில் நவீன இந்தியாவை உருவாக்க வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் உதவுவார்கள் என்று நம்பிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
thanks to newsindianews.com

0 comments:

Post a Comment