முன்னாள் அதிபர் முஷாரப், பாகிஸ்தான் வந்தால் நிச்சயம் கைது செய்யப்படுவார் என்று அந்நாட்டு அரசு வழக்குரைஞர் செளத்ரி சுல்பிகர் அலி தெரிவித்தார்.முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ படுகொலை வழக்கில் முஷாரப் குற்றம்சுமத்தப்பட்டுள்ளார். அவரை கைது செய்ய கைது ஆணைகூட தேவையில்லை என்றும் அவர் கூறினார். |
ராவல்பிண்டியில் உள்ள பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றத்தில் பேநசீர் படுகொலை வழக்கு சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. ஆனால் குற்றம்சுமத்தப்பட்டவர்கள் தரப்பிலான வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கு விசாரணையை 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி. அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் செளத்ரி சுல்பிகர் அலி, நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, இந்த வழக்கில் ஒத்துழைப்பு தராத முஷாரப் பாகிஸ்தான் வந்தால் நிச்சயம் கைது செய்யப்படுவார் என்றார். மேலும், குற்றம்சுமத்தப்பட்டவர்களின் வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தவிர்த்து வழக்கு விசாரணையை தாமதிக்க முயல்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த சில ஆண்டுகளாக லண்டனிலும், துபாயிலும் வசித்து வரும் முஷாரப், வரும் 25 அல்லது 27ம் திகதி பாகிஸ்தான் வரவுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், தான் தொடங்கியுள்ள அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் மூலம் பாகிஸ்தானில் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாகவும் குறிப்பிட்டிருந்தார். thanks to seithy.com |
0 comments:
Post a Comment