அபூ மஸ்லமா
ஜப்பான். பேர்ள் ஹார்பர் தாக்குதலை வெற்றிகரமாக ஜப்பானிய செம்படையினர் நிகழ்த்தி முடித்ததினால் ஏற்பட்ட ஆவேசமும் கொளரவ பிரச்சனையுமே அமெரிக்காவை ஜப்பான் மீது அனு குண்டுகளை வீச உந்தின. ஒரு பெரிய இராணுவ தோல்விக்கு விலை பல இலட்சக்கணக்கான ஜப்பானியரின் உயிர். பல இலட்சக்கணக்கான குழந்தைகளின் அங்கவீனம். இன்றும் ஹிரோஷிமாவில் புற்று நோயாளர்கள் பல இலட்சம் பேர் உள்ளனர். அதன் மண் வளத்திலும் கடல் வளத்திலும் கதிர்வீச்சுத்தன்மையின் தாக்கங்கள் பரவலாக உள்ளன. இவ்வளவிற்கும் ஜப்பான் அமெரிக்கா மீது குண்டு வீசவில்லை. மாறாக தென்கிழக்காசியாவை கைப்பற்றவே முனைந்திருந்தது.
ஈரான். அமெரிக்காவிற்கு சிம்ம சொப்பனமாக எப்போதும் தொல்லை தரும் தேசம். பனிப்போரின் பின்பு ரஷ்யாவிற்கு பதிலாக ஏவுகணை தொழில் நுட்பத்திலும் ஏனைய போரியல் தளபாடங்களிலும் புதிய புதிய கண்டு பிடிப்புகளை நிகழ்த்தும் தேசம். ப்றீமேசனின் கொள்கைகளிற்கு முட்டுக்கட்டை போடும் தேசம். ஸியோனிஸத்திற்கு வேண்டப்படாத தேசம். இஸ்ரேலின் இருப்பிற்கு திகதி குறிக்கும் தேசம். அமெரிக்க எதிர்ப்பு அரசியலை உலகில் நிலை நிறுத்த முயலும் தேசம். அப்படியானால் எத்தனை அனு குண்டுகளை வீச வேண்டும் ஈரான் மீது?.
அமெரிக்கா. ஈரானை அன்றைய ஜப்பானாக மாற்ற வேண்டும் எனும் ஆவேசம் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ளது. அரசியல் ரீதியாகவும், இராஜதந்திர ரீதியாகவும் ஈரானை அமெரிக்காவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சொல்லப்போனால் வாஷிங்டன் பலமுறை தெஹ்ரானிடம் தோற்றுப் போயுள்ளது. சைனா, ரஷ்யா, ஜேர்மன் என வல்லரசு தேசங்களை தனக்கு நெருங்கிய நண்பனாக கொண்ட தேசம் ஈரான். வெனிஸ்வெலா, கொலம்பியா, உருகுவே என லத்தீன் அமெரிக்க நாடுகளிற்கு வேறு ஏவுகணைகளை விற்கிறது ஈரான்.
ஈரானுடன் போரிட வேண்டும். அதுவும் 3ம் உலக யுத்தம் மூளாத வகையில் போரிட வேண்டும். கொஞ்சம் கடினமான விடயம் அமெரிக்காவிற்கு. ஈராக்கில் களமிறங்கியதன் விளைவாக அமெரிக்க பொருளாதாரம் பாரிய சறுக்கள்களை சந்தித்தது. பிறது ஆப்கானிஸ்தான், லிபியா என பல பொருளாதார பாரிய செலவீனங்களை தன்னகத்தே அமெரிக்கா உருவாக்கியுள்ளது. இப்போது ஈரான் மீது யுத்தம் செய்து முழு அமெரிக்கர்களையும்ர ஐரோப்பியர்களிற்கு அடகு வைக்கும் அரசியல் தவறை அமெரிக்கா செய்ய தயங்குகின்றது.
ஈராக்கிலோ அல்லது லிபியாவிலோ மக்கள் ஆளும் அரசியல் தலைமைகளுடன் வெறுப்புற்றிருந்தனர். ஜனநாயகம் வேண்டி நின்றனர். எளிதாக வேலையை முடித்தது அமெரிக்கா. ஈரானின் நிலை அவ்வாறல்ல. ஈரானை ஆளுவது அவர்களது மதப்பிரிவு. எந்த முரண்பட்ட கருத்துக்களை உடைய அரசியல் அல்லது இராணுவ தலைவர்களாக இருந்தாலும் ஈரானிய அதியுயர் பீட அயாத்துல்லாக்கள் சொல்லும் பேச்சை மாற்ற முடியாது. அயாத்துல்லாக்கள் அனைவருமே அமெரிக்க மற்றும் ஸியோனிஸ எதிர்ப்பாளர்கள். தேவையேற்படின் எஸ்.எல்.ஆர்.ரைபிள்களை ஏந்தி அமெரிக்கர்களை சுட தயங்காதவர்கள்.
ஈரானை அமெரிக்காவிற்கு ஜப்பான் போல ஒரு போதும் மாற்ற முடியாது. அமெரிக்க பொருளாதார முற்றுகை “வோல் ஸ்ட்ரீட்” முற்றுகை எனும் நிலையை தாண்டி அமெரிக்க நிர்வாக கட்டடங்கைள கைப்பற்றல் எனும் திசையில் பயணிக்கிறது. போலீஸ், ஆர்ப்பாட்டம், கண்ணீர்புகை பிரயோகம், தடியடி, பெற்றோல் குண்டு வீச்சு என நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. துணைப்படையினரும், ரேஞ்சர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். மீடியாக்கள் இதை ஒரு சாதாரண மக்கள் ஆர்ப்பாட்டம் என வெளி உலகிற்கு காட்டி வருகின்றன.
இஸ்ரேலிய இராணுவம் பலஸ்தீனியர்களை சுட்ட அதே “எம் 16” ரக ரைபிள்கள் இன்று அமெரிக்கரை சுடவும் தயாராகலாம். காஸாவின் குழந்தைகளை ருஷி பார்த்த அதே மேடின்அமெரிக்க “ரப்பர் குண்டுகள்” இன்று கலகம் செய்யும் அமெரிக்கர்களின் உடலை பதம் பார்க்கவும் வாய்ப்புள்ளது. இது தான் விதியின் எழுத்துக்கள். இஸ்ரேலையும், ஸியோனிஸத்தையும் மீறி ஈரானை நண்பனாக்க முயல்வதே அமெரிக்காவிற்கான ஒரே தீர்வு.
அமெரிக்க விமானம் கனணி தாக்குதல் மூலமே ஈரானில் வீழ்த்தப்பட்டுள்ளது
அமெரிக்காவின் அதி நவீன ஆளில்லா உளவு விமானம் கடந்த தினம் ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது அது ஈரானிய சைபர் போசஸ் எனும் கனனி தாக்குதல் பிரிவினரால் வீழ்த்தப்பட்டதாக உத்தியோகபூர்வமாக ஈரானிய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. RQ170 - SENTINAL DRONE எனும் ஸ்டெல்த் ரக விமானமே வீழ்த்தப்பட்டுள்ளது.
சீ.ஐ.ஏ.யின் பல வெற்றிகர தாக்குதல்களிற்கு உதவிய இந்த விமானம் பற்றிய செய்திலை அமெரிக்க அரசோ அ்ல்லது சீ.ஐ.ஏ.யோ வெளியில் சொல்லவில்லை. மிகவும் இரகசியமான போரிற்கு துணைநிற்கும் ஆயுதமாக பேணப்பட்டு வந்தது.
அபோதாபாத் தாக்குதலில் நன்கு பயன்படுத்தப்பட்ட இந்த விமானம் மீண்டும் ஈரானின் இராணுவ இலக்குகளை வேவு பார்த்த பொது தாக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய அரசால் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும் இந்த விமானத்தை அமெரிக்கா அதற்கு வழங்கவில்லை.
ஈரானிய அரசால் காட்சிக்கு வைக்கப்பட்டுளது. மேற்கு ஆப்கானிஸ்தானில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் ஈரானிய எல்லைக்குள் உள் நுழைந்த பின் இதன் முழு கட்டடுப்பாடும் பெக்ரான் தளத்தில் செயற்படும் விஷேட அமெரிக்க வீரர்களால் அற்றுப்போன நிலை தோன்றியது. விமானம் ஈரானில் வீழ்ந்திருக்கலாம் என அமெரிக்கா அறிவித்தது.
ஈரான் மேல் பறந்த விமானம் ஈரானிய சைபர் போஸ் அதிகாரிகளால் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு தரையிறக்கம் செய்யப்பட்டது. கட்டுப்பாட்டை இழந்தால் தானாகவே வெடித்து சிதறும் வகையில் இது வடிவமைக்கப்பட்டிருந்தது. முழுமையாக அது இரானின் வசம்வந்தமையானது அமெரிக்காவை கிலி கொள்ள செய்துள்ளது. நாளை இந்த விமானம் ரஷ்யாவிடமோ அல்லது சீனாவிடமோ சென்று விட்டால் அது அமெரிக்காவை மிகவும் பாதிக்கும் விடயமாக மாறிவிடலாம்.
0 comments:
Post a Comment