Monday, December 12, 2011

பின்லாடன் கொல்லப்பட்டது குறித்த விசாரணை அறிக்கை விரைவில் வெளியிடப்படும்

இஸ்லாமாபாத், டிச. 11-  அல்கொய்தா போராளி ஒசாமா பின்லாடன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்த விசாரணை அறிக்கை விரைவில் வெளியிடப்படும் எனப்படும் என பாக். விசாரணை கமிஷன் அதிகாரிகள் தெரிவித்தனர்.கடந்த மே 1-ம் தேதியன்று பாகிஸ்தானின் அபோதாபாத்தில் பதுங்கியிருந்த சர்வதேச போராளி ஒசாமா பின்லாடன், அமெரிக்க கமாண்டோ படை
யால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது உடல் கடலில் வீசி எறியப்பட்டது. பின்லாடன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சுப்ரீம் உத்தரவின்படி, பாகிஸ்தான் அரசு விரிவான விசாரணைக்க உத்தரவிட்டது. இதன்படி ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஜாவியத் இக்பால் தலைமையின் கீழ் ஐந்து பேர் கொண்ட விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.
இதுகுறித்து விசாரணை கமிஷன் தலைவர் ஜாவியத் இக்பால் கூறுகையில், பின்லாடன் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான விசாரணை முடியும் நிலையில் உள்ளது. அமெரிக்க அரசுடன் மேலும் சில தகவல்கள் பெற வேண்டியுள்ளது. மேலும் பின்லாடன் மனைவி, அரசியல்வாதிகள், ராணுவ உயரதிகாரிகள், முன்னாள் அமைச்சர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 1000 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இம்மாத இறுதியில் அறிக்கை முழுமையாக முடிந்து விடும் பின்னர் அரசிடம் தாக்கல் செய்யப்படும். அந்த அறிக்கை வெளிப்படையானதாக இருக்கும். இந்த அறிக்கை தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம், உண்மை நிலவரத்தினையும் தெரிவிக்கலாம் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு தரப்படும் என்றார்.
ismail

0 comments:

Post a Comment