ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்த யாரையும் நான் சந்திக்கவில்லை. எந்த அடிப்படையில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன என்பது தெரியவில்லை என ஹசாரே தெரிவித்தார்.
எனினும் இதுதொடர்பான ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத்தின் அறிக்கையை சுட்டிக்காட்டி காங்கிரஸ் பொதுச்செயலர் திக்விஜய சிங் ஹசாரே மீது குறைகூறியுள்ளார்.
"அண்ணா ஹசாரே மற்றும் ராம்தேவின் பிரசாரங்கள் அனைத்தும் ஆர்எஸ்எஸ்ஸால் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுபவை என நான் முன்பிலிருந்தே கூறி வருகிறேன். இந்த உண்மையை மோகன் பகவத் ஒப்புக்கொண்டதில் மகிழ்ச்சி. என்னுடைய கூற்று உறுதியாக்கப்பட்டுள்ளது. அண்ணா ஹசாரேவின் பிரசாரம் ஆர்எஸ்எஸ்ஸால் நடத்தப்படுகிறது என நான் எப்போது கூறினாலும், என்னை மனநல மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என்று அவர் கூறுவார். இப்போது நான் மனநல மருத்துவமனைக்கு போக வேண்டுமா, வேண்டாமா என்பது தெரியவில்லை" என திக்விஜய் சிங் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment