இவ்வளவ அருமையான புஹாரி மற்றும் முஸ்லிம் ஹதீஸ் நூல்களின் மொழிபெயர்ப்பு மற்றும் குர் ஆனுக்கு இப்னு கஸீர் தஃப்ஸீருக்கு தமிழ் விளக்கவுரை வெளியிட்ட உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது ?ரஹ்மத் வெளியீட்டாளர்களே. நீங்கள் செய்து வந்ததாகச் சொல்லும் சேவைகள் வெறும் வருமானம் மற்றும் வியாபாரத்திற்கு மட்டுமே செய்து வந்தீர்களா?ஏகன் அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்து இல்லையா? உங்களது ஆண்டு மலரில் நமது உயிரினும் மேலான பெருமானார்(ஸல்) அவர்களின் உருவத்திற்கு இணையாக கார்ட்டூன் வெளியியிடும் அளவுக்குத் தரம் தாழ்ந்து விட்டீர்களா? என்ன பாவத்தைச் சுலபமாகச் செய்வதற்குத் துணிந்து விட்டீர்களா? அல்லாஹ்வினுடைய பயம் உங்களுக்கு அறவே இல்லாமல் போய் விட்டதா? நீங்கள் வெளியிட்ட அந்த அனைத்து ஆண்டு மலர்களையும் திரும்பப் பெற்று தமிழகத்தின் அனைத்து முஸ்லிம்களிடமும் மன்னிப்புப் பெறுவதுடன் அல்லாஹ்விடமும் மன்னிப்புக் கோருவதுடன் இனிமேல் இதுமாதிரியான தவறு செய்ய மாட்டோம் என்று அல்லாஹ்விடமும் உறுதி அளியுங்கள்.
by Abdul Gafoor
0 comments:
Post a Comment