பெட்டாலிங் ஜெயா, 5 ஆக்டோபர்- நாட்டில் 1.3 மில்லியன் அந்நியத் தொழிலாளர்களின் பிரச்சனையைத் தீர்க்கும் வகையில், மேலும் அதிகமான அந்நியத் தொழிலாளர்கள் நாட்டிற்குள் நுழைவதை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என எம்.டி.யு.சி எனப்படும் மலேசியத் தொழிலாளர் காங்கிரஸ் கேட்டுக்கொண்டுள்ளது.
இவ்விவகாரத்தை அரசாங்கம் கடுமையாகக் கருத வேண்டும், இல்லாவிட்டால் அது மலேசிய குடிமக்களுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என எம்.டி.யு.சி-யின் துணைத் தலைவர் ஏ.பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.
அந்நியத் தொழிலாளர்கள் மலிவாகக் கிடைப்பதால், மலேசியர்களின் வாய்ப்புகள் பறிக்கப்படும்.ஏனெனில் முதலாளிமார்கள் குறைந்த வருமானத்திற்கு அந்நியத் தொழிலாளர்களையே நாடுவதாக” அவர் எச்சரித்தார்.
0 comments:
Post a Comment