Showing posts with label vanakkam malaysia news. Show all posts
Showing posts with label vanakkam malaysia news. Show all posts

Thursday, October 6, 2011

நாட்டிற்குள் அந்நியத் தொழிலாளர்களை அனுமதிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்.(malaysia news)


நாட்டிற்குள் அந்நியத் தொழிலாளர்களை அனுமதிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்.பெட்டாலிங் ஜெயா, 5 ஆக்டோபர்- நாட்டில் 1.3 மில்லியன் அந்நியத் தொழிலாளர்களின் பிரச்சனையைத் தீர்க்கும் வகையில், மேலும் அதிகமான அந்நியத் தொழிலாளர்கள் நாட்டிற்குள் நுழைவதை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என எம்.டி.யு.சி எனப்படும் மலேசியத் தொழிலாளர் காங்கிரஸ் கேட்டுக்கொண்டுள்ளது.
இவ்விவகாரத்தை அரசாங்கம் கடுமையாகக் கருத வேண்டும், இல்லாவிட்டால் அது மலேசிய குடிமக்களுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என எம்.டி.யு.சி-யின் துணைத் தலைவர் ஏ.பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.
அந்நியத் தொழிலாளர்கள்  மலிவாகக் கிடைப்பதால், மலேசியர்களின் வாய்ப்புகள் பறிக்கப்படும்.ஏனெனில் முதலாளிமார்கள் குறைந்த வருமானத்திற்கு அந்நியத் தொழிலாளர்களையே நாடுவதாக” அவர் எச்சரித்தார்.


Saturday, April 30, 2011

தனது பிறப்புச் சான்றிதழை வெளியிட்டார் ஒபாமா.


தனது பிறப்புச் சான்றிதழை வெளியிட்டார் ஒபாமா.வாஷிங்டன் - அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒபாமா, அமெரிக்காவில் பிறந்தவரல்ல என்றும் 
வெளிநாட்டில் பிறந்த ஒருவர் அமெரிக்காவின் முறையான அதிபராக இருக்க முடியாது என்ற சர்ச்சையை எதிர்க்கட்சிகள் கிளப்பின. இருப்பினும் தாம் அமெரிக்க மாநிலத்தில் தான் பிறந்ததாக ஒபாமா விளக்கமளித்தார். எனினும் அந்த சர்ச்சை ஒயாத நிலையில் தனது பிறப்புச் சான்றிதழை  வெள்ளை மாளிகை இணையத் தளத்தில் ஒபாமா நேற்று வெளியிட்டார்.
அமெரிக்காவின் ஹாவாய் மாநிலம், ஹானோலுலு என்ற இடத்தில் ஒபாமா பிறந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது. அப்பிறப்புச் சான்றிதழில் உள்ளாட்சி அதிகாரியும், ஒபாமாவின் தாயாரும் கையெழுத்திட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, April 25, 2011

பேஸ்புக் இணையதள நண்பர்கள் சமூக அக்கறை உள்ளவர்களா?


பேஸ்புக் இணையதள நண்பர்கள் சமூக அக்கறை உள்ளவர்களா?
 "பேஸ்புக் போன்ற சமூக இணையதளங்களில் உலவுவோர் உண்மையில் சமூக அக்கறை இல்லாதவர்கள்; இதுபோன்ற "ஆன்லைன்' நண்பர்களை நம்பாமல் இருப்பதே நல்லது' என, மனநல நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சமீபத்தில், பிரிட்டனை சேர்ந்த 42 வயது பெண் ஒருவர் தனது 1,048 "பேஸ்புக்' நண்பர்களுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆனால், எவருமே அவருக்கு நன்றி அல்லது வாழ்த்துகள் தெரிவிக்கவில்லை.
இதனால், மனமுடைந்த அவர் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டுள்ளார். அதுபற்றியும் தனது "பேஸ்புக்' பக்கத்தில் எழுதியுள்ளார். அவரது நண்பர்கள் பலர் இதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை என்றாலும், ஒருசிலர் மட்டும் கடமைக்காக அவரது முகவரியைக் கேட்டுள்ளனர். இருந்தாலும் யாரும் குறிப்பிட்ட நபரை நேரில் சென்று பார்க்கவில்லை. மறுநாள் அப்பெண்ணை பார்க்க வந்த அவரது தாய், தனது மகளின் தற்கொலையைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இந்த தற்கொலை சம்பவம் "பேஸ்புக்' இணைய நண்பர்கள் பற்றி வலுவான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் மனநல நிபுணர்கள் சிலர் இதுகுறித்து கூறியதாவது: உண்மையான ரத்தமும், சதையுமான நண்பர்களை யாரும் நம்புவதில்லை. மாறாக, இதுபோன்ற சமூக வலைதளங்களில் உள்ள நண்பர்களையே மிகவும் நம்புகின்றனர். சமூக வலை தளங்களில் முகம் தெரியாத, சமூக அக்கறை இல்லாத பலர் நண்பர்களாக வலம் வருகின்றனர். இன்னும் சிலர் குளிப்பது முதல் தூங்குவது வரை பல விஷயங்களை தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர்; நண்பர்களும் தங்களைப் போல் உண்மையாக இருப்பதாக நினைத்து ஏமாறுகின்றனர்.
தற்போதைய உலகில் உண்மையான நட்பு என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்று. இந்த நிலையில், "பேஸ்புக்' போன்ற சமூக வலை தளங்களில் முன்பின் பார்க்காத, முகம் தெரியாத நண்பர்கள் அவசியம் தானா என்பதை நாம் யோசிக்க வேண்டும். சமூக வலை தளங்களில் உலவும் பலருக்கு "நண்பர்கள்' என்பதன் உண்மை அர்த்தம் தெரிவதில்லை. நேரம் கடத்தவும், பொழுதுபோக்கவும் பயன்படும் சமூக வலை தளங்களில் உண்மையை எதிர்பார்ப்பது அவசியமற்ற ஒன்று.
"தனக்கு எது நடந்தாலும் "பேஸ்புக்' நண்பர்கள் காப்பாற்றுவர்' என நினைப்பது அடிமுட்டாள்தனம். உங்களுக்கு சம்பந்தமில்லாத ஒருவர் எதையாவது கூறும்போது, நீங்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அமைதியாக இருந்து விடலாம். இவ்வாறு மனநல நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
"பேஸ்புக்' செய்தித் தொடர்பாளர் மரியா ஹீத் இதுகுறித்து கூறுகையில்,"தற்கொலைகளை தடுக்க எங்களால் முடிந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். எனினும், பிரச்னை உள்ளவர்கள் "பேஸ்புக்' இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள உதவி மையத்தை தொடர்புகொண்டால், உரிய தீர்வு காண நாங்கள் முயற்சிப்போம். இதற்காக, முழுநேர பணியாளர்களையும் நியமித்துள்ளோம். கடந்த ஆண்டில், இதுபோன்று 129 பேரின் பிரச்னைகளை தீர்த்து வைத்துள்ளோம்,'' என்றார்.

பார்வை இழப்பைத் தடுக்க இனி ஒரு ஊசி மட்டும் போதும்!


பார்வை இழப்பைத் தடுக்க இனி ஒரு ஊசி மட்டும் போதும்
லண்டன்: பார்வை இழப்பைத் தடுக்க இனி ஒரெ ஒரு ஊசி போதும் என்று இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அந்த ஊசி மூலம் ஸ்டிராய்டை கண்களுக்குப் பின்னால் இடம்பெற செய்து விட்டால் பார்வையிழப்பை எற்படுத்தக்கூடிய கண்நரம்பு அடைப்பை அது கட்டுப்படுத்தும். இதன் மூலம் திடீர் பார்வை இழப்பு ஏற்படாது என்று கண் சிகிச்சை நிபுணரும் விஞ்ஞானிகள் குழுவில் இடம்பெற்றவர்களில் ஒருவரான ஆலிவர் பேக்ஹவுஸ் கூறினார். விழித்திரைக்கு அருகே எரிச்சலுக்கான மருந்தை அந்த ஊசி வெளியிடும். எனவே கண் எரிச்சலால் ஏற்படும் பார்வை இழப்பைத் தடுக்கலாம். மேலும் இந்த ஊசி எதிர்கால பார்வையிழப்பைத் தடுக்கவும் பயன்படுத்தலாம். பலவிதமான கண் நோய்களைக் குணப்படுத்தவும் இந்த ஊசி உதவும். நீரிழிவு நோய் மற்றும் வயது காரணமாக ஏற்படும் பார்வைக் குறைபாடுகளையும் தவிர்க்க முடியும்.