Saturday, October 8, 2011

17 ஆயிரம் ஆணி மீது நடனமாடிய முஸ்லீம் மாணவி!

கும்பகோணம்: விஜயதசமியை முன்னிட்டு கும்பகோணத்தில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த 11 வயது மாணவி 17ஆயிரம் சிறிய ஆணியின் மீது பரத நாட்டியமாடினார்.

கும்பகோணம் எல்.பி.எஸ்.சாலையில் அபிநயாஸ் நாட்டியப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் நிறுவன ஆசிரியை விஜயமாலதியிடம் சுமார் 500 மாணவ,மாணவிகள் பரத நாட்டியம், கிராமிய நடனம், பாட்டு மற்றும் மேலைநாட்டு நடனம் பயின்று வருகின்றனர். இதில் கும்பகோணம்  செட்டிமண்டபத்தை சேர்ந்த மாஹர், சலீமா பீவி தம்பதியின் மகள் ரகிமோனிஷாவும்(11) ஒருவர். 6வது படித்து வரும் இ¢ம்மாணவி கடந்த 7 வருடமாக இப்பள்ளியில் பரதநாட்டியம், கிராமிய நடனம் உள்ளிட்டவைகளை கற்றுவருகிறார். கின்னஸ் சாதனையில் இடம் பெற வேண்டும் என்பதற்காக கடந்த ஒரு மாதமாக ஆணி மீது பரதம் ஆடும் பயிற்சி பெற்றுவந்தார். 

விஜயதசமியான நேற்று, பள்ளி அரங்கில் கும்பகோணத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் ஆணி மீது பரதநாட்டியம் ஆடும் நிகழ்ச்சி அரங்கேற்றம் நடைபெற்றது. மாணவிகள் ஏ.வி.அர்ச்சனா(12), சுவாதி(12), ஆர்.அபிராமி(14) ஆகியோர் விநாயகர் பாடலுக்கு தரையில் ஆட ரகிமோனிஷா மட்டும் 17ஆயிரம் சிறிய ஆணிகள் மீது ஆடி அனைவரையும் பரவசப்படுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

நான் ஆசிரியர்கள் விஜயமாலதி, குணசேகரன் ஆகியோரிடம் கடந்த 7 வருடமாக இப்பள்ளியில் பரதம், பாட்டு, கிராமிய நடனம் மற்றும் மேலைநாட்டு நடனம் உள்ளிட்டவைகளை கற்று வருகிறேன். என் தந்தை மெடிக்கல்ஷாப் வைத்துள்ளார். கின்னஸ் சாதனையில் இடம் பெறவேண்டும் என்பதற்காக ஆணி மீது நடனம் ஆடும் பயிற்சி பெற்று வந்தேன்.  இன்று(நேற்று) விஜயதசமியை முன்னிட்டு ஆணி மீது பரத நடனத்தை அரங்கேற்றியிருக்கிறேன். இவ்வாறு ரகிமோனிஷா தெரிவித்தார்.

"பெற்றோரின் அலட்ச்சியத்தால் குழந்தைகள் வழிதவரிவிடுகிறார்கள். 
இது போன்றுதவறுகள் நடக்காமல் இருக்க குழந்தை வளர்ப்பிள் நாம் கவனமாக இருக்க வேண்டும்.அடிப்படையில் நமது மார்க்கத்தை பற்றி கூறி வளர்க்க வேண்டும். சிற்க்கான விசயங்களைவிட்டு விளகி க்கொள்ள வேண்டும்"

1 comment:

  1. சகோதரரே இது அதிரை செய்தியில் வெளியிடபட்டது நீங்கள் By Adirai Seithi
    என்று உங்கள் போஸ்ட்டிள் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிரோம்.

    ReplyDelete