Thursday, October 6, 2011

இந்தியா-பாக்.,எல்லையில் ரூ.135 கோடி ஹெராயின்


அட்டாரி: இது வரை இல்லாத அளவிற்கு ஹெராயின் என்ற போதைபொருளுடன் இந்திய எல்லைக்குள் புக முற்பட்ட கடத்தல்காரர்களை எல்லை பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டு விரட்டினர். இதில் கடத்தல்காரர்கள் விட்டு சென்ற 27 கிலோ நார்காட்டிக் என்ற போதைபொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்திய - பாக்., எல்லை பகுதியான அட்டாரி பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர், இந்நேரத்தில் சிலர் இந்திய எல்லைக்குள் நுழைவதை கண்டதும் உஷாராயினர். தொடர்ந்து துப்பாக்கியால் சுடத்துவங்கியதும் கடத்தல்காரர்கள் பாக்,எல்லைக்குள் திரும்பி விட்டனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்தப்பகுதியில் அவர்கள் கொண்டு வந்த நார்காடிக் என்ற போதைபொருள் 27 கிலோ போட்டு விட்டு சென்று விட்டனர். இதன் சர்வதேச மதிப்பு 135 கோடி ஆகும் . இது குறித்து பி.எஸ்.எப்., இன்ஸ்பெக்டர் பவான்சவுத்திரி கூறுகையில்; இது போல் இந்த அளவிற்கு போதை பொருள் இது வரை கைப்பற்றியதில்லை. தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

கடந்த அக்., 4 ம் தேதி ரூ. 75 கோடி மதிப்பு கொண்ட 15 கிலோ ஹெராயின் கைப்பற்றபட்டது என்பது குறிப்பிடத்தக்கது .

0 comments:

Post a Comment