6 Oct 2012
அஹமதாபாத்: 2002ல் நடந்த குஜராத் இனப்படுகொலையில் நரோடா பாட்டியாவில் 93 முஸ்லிம்களைக் கொடூரமாகக் கூட்டுப் படுகொலை செய்த வழக்கில் ஒரு ஹிந்துத்துவா தீவிரவாதிக்கு 31 வருட கடுங்காவல் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சுரேஷ் என்ற ஷெஹ்பாத் நெடால்க்கர் என்பவனுக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜியோத்சியூனா யஞ்சிக் இந்தத் தண்டனையை வழங்கினார். வழக்கு விசாரணையின் பொழுது பிணையில் வெளிவந்த ஷெஹ்பாத் பின்னர் தலைமறைவானான். கடந்த வியாழக்கிழமை குற்றப்பிரிவு போலீசார் அவனைப் பிடித்து கைது செய்தனர்.
இந்த ஷெஹ்பாத் நரேந்திரமோடி அரசின் முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி உட்பட மொத்தம் 32 பேர் நரோடா பாட்டியா படுகொலை வழக்கில் குற்றவாளிகள் என்று சிறப்பு நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி அறிவித்தது. ஆகஸ்ட் 31ம் தேதி ஷெஹ்பாத் தவிர்த்து மற்ற அனைத்து ஹிந்துத்துவா குற்றவாளிகளுக்கும் வெவ்வேறு விதமான தண்டனைகள் அளித்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
பிணையில் வெளிவந்து தலைமறைவான ஷெஹ்பாத்தை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த நீதிமன்றம், இவனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும் வரை இவனுக்குரிய தண்டனையை ஒத்தி வைத்தது. ஷெஹ்பாத்தை உடனடியாகத் தேடிப் பிடிக்கவேண்டும் என்று சிறப்புப் புலனாய்வுத் துறைக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
6 மாதத் தேடலுக்குப் பிறகு மகாராஷ்ட்ராவிலுள்ள நந்தூர் பார் என்னுமிடத்தில் போலீசார் இவனைக் கைது செய்தனர். ஷெஹ்பாத்தைப் பிடித்த போலீசாரை நீதிபதி பாராட்டினார்.
முன்பு ஷெஹ்பாத்திற்காக வாதாடிய வழக்கறிஞர் இப்போது அவனுக்காக வாதாட முன்வரவில்லை. அதனைத் தொடர்ந்து நீதிமன்றம் ஷெஹ்பாத்துக்கு ஒரு வழக்கறிரை நியமித்தது
இவனுக்கு தூக்குதான் சரியான தண்டனை 31 வருடம் அரசாக்கா சோறு பாதுகாப்பு தூக்கம் உடை இதல்லாம் வேசிட் செலவு இந்த தீவிரவாதிக்கு தூக்குதான் சரியான தண்டனை. நாட்டமே தீர்ப்ப மாத்து?
ReplyDelete