Thursday, September 27, 2012

அப்துல் நாஸர் மஃதனியின் ஜாமீன் மனு: கர்நாடகா அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

Madani bail plea- HC notice to State govt

பெங்களூர்:பெங்களூர் தொடர் குண்டுவெடிப்புகள் வழக்கில் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கேரள மாநில பி.டி.பி தலைவர் அப்துல் நாஸர் மஃதனியின் ஜாமீன் மனு மீதான விசாரணையில் கர்நாடகா அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நீரழிவு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் அவதியுறும் அப்துல் நாஸர் மஃதனிக்கு அவரது உடல் நிலையை கவனத்தில் கொண்டு ஜாமீன் அனுமதிக்கவேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்துல் நாஸர் மஃதனியின் உடல் நிலை குறித்த மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்கவும் அக்ரஹார சிறை சூப்பிரண்டிற்கு நீதிபதி ஹெச்.என்.நாக மோகன்தாஸ் உத்தரவிட்டார். அக்டோபர் 3-ஆம் தேதிக்கு முன்னர் அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2010-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17-ஆம் தேதி கைதுச் செய்யப்பட்ட அப்துல் நாஸர் மஃதனி கர்நாடகா மாநிலம் அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அப்துல் நாஸர் மஃதனி தனது ஜாமீன் மனுவில் கூறியிருப்பது: “நீரழிவு நோயாளியான நான் சக்கர நாற்காலியில் நடமாடுகிறேன். எனக்கு ஒரு கால் முறித்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. கண் பார்வை கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் என்னை பாதித்துள்ளன. நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் மேற்கூறப்பட்ட நோய்களுக்கு முறையான சிகிட்சை வழங்கப்படவில்லை. வலது கண்ணின் பார்வை இழந்துவிட்டது. இடது கண்ணிற்கு 30 சதவீத மட்டுமே பார்வை சக்தி உள்ளது. போதிய முன்னேற்பாடுகள் இன்றி அவசர அவசரமாக எனது கண்ணுக்கு லேசர் சிகிட்சை அளிக்கப்பட்டது. விசாரணை நீளுவது எனது குற்றமல்ல. ஆகையால் சிறப்பு மருத்துவமனையில் சிகிட்சை மேற்கொள்ள ஜாமீன் அனுமதிக்க வேண்டும்.” இவ்வாறு அப்துல் நாஸர் மஃதனி கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment