28 Sep 2012
டமாஸ்கஸ்:சர்வாதிகாரி பஷாருல் ஆஸாதிற்கு எதிரான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் நேற்று முன்தினம்(புதன் கிழமை) மட்டும் 305 பேர் படுகொலைச் செய்யப்பட்டுள்ளனர். இதில் சாதாரண அப்பாவி மக்கள் 199 பேர் அடங்குவர். பஷாருல் ஆஸாதிற்கு எதிரான போராட்டம் துவங்கிய பிறகு ஒரேநாளில் அதிகம் பேர் இப்பொழுதுதான் கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவில் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது.
டமாஸ்கஸில் ராணுவ தலைமையகத்தின் மீதான தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்.குண்டுவெடிப்பை தொடர்ந்து அப்பகுதியில் நிகழ்ந்த மோதலில் ஐந்து அரசு எதிர்ப்பாளர்களும் கொல்லப்பட்டனர். புதன் கிழமை கொலைச் செய்யப்பட்டவர்களில் 199 பேர் சாதாரண மக்கள் என்று கண்காணிப்புக்குழு இயக்குநர் ராமி அப்துல் ரஹ்மான் எ.எஃப்.பிக்கு தெரிவித்துள்ளார். பெயர் விபரங்கள் தெரிந்த இறந்த உடல்கள் மட்டுமே 305 என்றும், அடையாளம் தெரியாத உடல்களையும் சேர்த்தால் மரண எண்ணிக்கை இன்னும் அதிகம் என்று அப்துல்றஹ்மான் கூறினார்.
சர்வாதிகாரி பஷாருல் ஆஸாதிற்கு எதிரான போராட்டம் துவங்கிய பிறகு ஒரேநாளில் இவ்வளவு அதிகமானபேர் கொல்லப்படுவது இதுவே முதன் முறையாகும். பஷாருக்கு எதிரான போராட்டம் துவங்கிய பிறகு 30 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
அதனிடையே, சிரியாவில் இருந்து புலன்பெயர்ந்தோரின் எண்ணிக்கை இவ்வருடத்தில் ஏழு லட்சமாகும் என்று ஐ.நா அகதிகள் ஏஜன்சி கூறியுள்ளது. தற்போது 3 லட்சம் பேர் சிரியாவை விட்டு வெளியேறியதாக முன்னர் ஐ.நா ஏஜன்சி தெரிவித்திருந்தது. புலன்பெயர்ந்தோரில் பெரும்பாலானோர் துருக்கி, லெபனான், ஜோர்டான் ஆகிய நாடுகளில் தங்கியுள்ளனர்
0 comments:
Post a Comment