இந்திய ராணுவ ரகசியங்கள் மற்றும் ராணுவ பயிற்சி மையங்களின் புகைப்படங்களை வெளிநாட்டுக்கு கடத்த முயன்றதாக கூறி, தமீம் அன்சாரி (35) என்பவரை "கியூ பிரிவு போலீஸார்" கைது செய்துள்ளனர்.
அதிரைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான் என்பவரின் மகன் தமீம் அன்சாரி,வெங்காய வியாபாரி. தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள அழகம்மாள் நகர், தாஜ் ரெசிடென்சி என்ற முகவரியில் வசித்து வருகிறார். எம்.ஏ. பட்டதாரியான அன்சாரியால், வீடியோ, வரைபடங்கள் ஆகியவற்றை "இணையதளம்" மூலம், இலங்கைக்கு அனுப்ப இயலவில்லையாம். இதனால், இலங்கைக்கு நேரடியாகச் சென்று அதை வழங்க தமீம் அன்சாரி முயன்றதாக போலீசார் கூறுகின்றனர். இது வரை பாகிஸ்தானுக்கே செல்லாத அவர் மீது, பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தமீம் அன்சாரியிடமிருந்து 3 செல்போன்கள், 25 CDக்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். தமீம் அன்சாரி மீது, இந்திய அரசாங்க ரகசியங்கள் சட்டம் 1923-ன் 3,4,9 பிரிவுகள் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 120 பி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
"இந்த கைதின் பின்னணியில் பல்வேறு மர்மங்கள் உள்ளன. குறிப்பாக தமீம் அன்சாரி
ரகசியங்களை ஒய்வு ஒரு பெற்ற ராணுவ அதிகாரியிடமிருந்து பெற்றதாக முதலில் செய்தி வெளியிட்ட மீடியாக்கள் அந்த ராணுவ அதிகாரியின் பெயரை மறைத்து விட்டதும், ஒரு சில மீடியாக்கள் இவர் பாக்கிஸ்தானிற்கு ராணுவ ரகசியங்களை கடத்த முயன்ற போது கைது செய்யப்பட்டதாகவும் சில மீடியாக்கள் இலங்கைக்கு கடத்த முயன்ற போது கைது செய்யப்பட்டதாகவும் மாறி மாறி செய்திகள் வெளியிட்டதும் மர்மமாகவே உள்ளது. இது குறித்து உண்மையறியும் குழு அமைத்து விசாரித்து வருகிறோம்" என நமதூரைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவரும் மனித உரிமை ஆர்வலருமான Z.முஹம்மது தம்பி கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment