Monday, September 24, 2012

நள்ளிரவில் அடிக்கடி மின் தடை-அதிரை பொதுமக்கள் கொந்தளிப்பு


தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக இந்த மின் தடை பிரச்னை இருந்து வருகிறது.4 மணிநேரமாக இருந்த இந்த மின் தடை தற்பொழுது 10 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.இந்த 10 மணி நேரம் மின் தடை பொது மக்களை,குறிப்பாக மாணவர்களை பெரிதும் பாதிப்படைய செய்துள்ளது. பனிரெண்டாம் வகுப்புகளுக்கு அரசுப் பொதுத் தேர்வு துவங்க 4 மாதங்களே உள்ள நிலையில் இப்படி தேவையற்ற மின் தடை செய்து அப்படி எதை சாதிக்கபோகிறார்கள் என்று தெரியவில்லை.

தற்பொழுது மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு நடைபெற்று கொண்டிருக்கும் இவ்வேளையில்,அறிவிப்பிலாத மின் தடை செய்வது நல்லதல்ல.நமதூர் அதிரையில் 8 மணி நேரத்திற்கும் மேலாக மின் தடை செய்யப்படுகிறது.இதனால் பொதுமக்களும்,குறிப்பாக சின்னஞ் சிறு குழந்தைகளும் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர்.

அதிரை மின்சார வாரியத்திற்கு இதுபற்றி தொடர்பு கொண்டு கேட்டால் எங்களுக்கு தெரியாது,மதுக்கூர் மின்சார வாரியத்தை கேளுங்கள் என்று தெனாவெட்டாக பதில் கூறுகின்றனர்.சரியான முறையில் பதில் தராத கர்ரனதால் மக்கள் மிகுந்த கோபத்திற்கு ஆளாகின்றனர்.

இப்படி அறிவிப்பில்லாமல் மின் தடை செய்தால் அதிரை மக்கள் ஒன்று கூடி அதிரையே அதிரும் அளவிற்கு ஆர்பாட்டம் செய்யப்படும்.இந்த மின் தடை நேரத்தை குறைக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த அதிரை மக்களின் எதிர்பார்ப்பு!

தகவல்:அதிரை குரல்

0 comments:

Post a Comment