Wednesday, September 19, 2012

நிரபராதிகளுக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றத்தை அணுகுவோம் – நீதிபதி ராஜேந்திர சச்சார்!

Former Delhi High Court judge Rajinder Sachar
புதுடெல்லி:போலீசும், அரசும் தீவிரவாதிகளாக சித்தரித்த காரணத்தால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிரபராதிகளுக்கு இழப்பீடு வழங்க கோரி நீதிமன்றத்தை அணுகுவோம் என்று நீதிபதி ராஜேந்திர சச்சார் கூறியுள்ளார். ஜாமிஆ டீச்சர்ஸ் சோலிடாரிட்டி அசோசியேசன் சார்பாக தயாரிக்கப்பட்ட அறிக்கையை வெளியிட்டு உரையாற்றினார் சச்சார்.
பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்டர் நிகழ்ந்து நான்காம் ஆண்டு நினைவு தினத்தில் ஜாமிஆ டீச்சர்ஸ் சோலிடாரிட்டி அசோசியேசன்
அவர் தனது உரையில் கூறியது: “பா.ஜ.க ஆளும் கர்நாடகா மாநிலத்திலும், காங்கிரஸ் ஆளும் டெல்லியிலும் ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆங்கிலேயர்களுக்கு கூட அவமானத்தை ஏற்படுத்திய தேசத்துரோக சட்டங்களை அரசு தீவிரமாக பிரயோகித்து வருகிறது” என்று சச்சார் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பிரபல எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான அருந்ததிராய், வழக்கறிஞர் பாஞ்சோலி ஆகியோரும் சச்சாருடன் இணைந்து அறிக்கையை வெளியிட்டனர். 14 ஆண்டுகள் அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் குற்றமற்றவர் என விடுதலைச் செய்யப்பட்ட ஆமிர் கான், மக்பூல் ஷா ஆகியோர் தங்களின் வாழ்க்கை கனவுகளையும், நம்பிக்கைகளையும் எவ்வாறு தகர்க்கப்பட்டது என்பதை நிகழ்ச்சியில் கலந்துகொண்டோரிடம் விவரித்தனர்.
 0 0 0 2

0 comments:

Post a Comment