31 Dec 2012
கெய்ரோ:சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் முன்னாள் தலைவர் முஹம்மது அல் பராதி, முன்னாள் அரபு லீக் பொதுச் செயலாளர் அம்ர் மூஸா, டிக்னிடி கட்சியின் தலைவர் ஹம்தீன் ஸபாஹி ஆகியோர் மீதான தேசத்துரோக குற்றத்தை எகிப்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது.
அதிபர் முர்ஸியின் அரசை கவிழ்க்க முயற்சி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதை தொடர்ந்து இவர்கள் மீது தேசத்துரோக குற்றம் சுமத்தப்பட்டது. அரசியல் சாசனத்திற்கு எதிராக எகிப்தின் பல்வேறு பகுதிகளில் எதிர்கட்சியினர் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்ததை தொடர்ந்து வழக்கறிஞரான அஸ்கலானி என்பவர் எதிர்கட்சி தலைவர்கள் மீது வழக்கு தொடர்ந்தார்.
முர்ஸியை கவிழ்க்க எதிர்கட்சி தலைவர்கள் சதித்திட்டம் தீட்டினார்கள் என்பது அஸ்கலானியின் குற்றச்சாட்டு. ஆனால், புகாரை வாபஸ் பெற அஸ்கலானி முடிவுச் செய்ததால் அரசு இவர்கள் மீதான தேசத்துரோக குற்றத்தை வாபஸ் பெற தீர்மானித்தது. ஜனநாயக தத்துவங்களை மதிப்பதால் வழக்கை வாபஸ் பெறுவதாக அஸ்கலானி தெரிவித்தார். நன்றி. தூது
0 comments:
Post a Comment