Thursday, February 10, 2011

இந்தியாவின் பயங்கரவாத நீதிபதிகளும்!! நீதி மன்றங்களும்!!!

பிலாஸ்பூர், பிப்.9- நக்ஸலைட்டுகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சமூக ஆர்வலர் விநாயக் சென்னின் ஜாமீன் மனு மீதான உத்தரவை சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. டிசம்பர் 24-ம் தேதி ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்ட அவர் தற்போது ராய்ப்பூர் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனு இன்று சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தி்ல் விசாரணைக்கு வந்தது. அப்போது, விநாயக் சென்னுக்கு ஜாமீன் வழங்க சத்தீஸ்கர் மாநில அரசு வழக்கறிஞர் கிஷோர் பதூரி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, விநாயக் சென்னின் ஜாமீன் மனு மீதான உத்தரவை சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. மனித உரிமை மீறல்களை எதிர்த்து குரல் கொடுத்ததால்தான் விநாயக் சென் சத்தீஸ்கர் அரசால் திட்டமிட்டு பலிகடா ஆக்கப்பட்டுள்ளார் என்று இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் புகார் கூறி வருகின்றனர். விநாயக் சென் தொழில்ரீ தியான மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிந்திக்க ஆசிரியர்: இந்தியாவின் கேடுகெட்ட நீதித்துறை!! பயங்கரவாதிகள் எல்லாம் வெளியே இருக்க மனித உரிமை ஆர்வலர் ஏழை குழந்தைகளுக்கு மருத்துவம் செய்து வந்த குழந்தைகள் நல மருத்துவர் விநாயக் சென்னிற்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி உண்மையிலே ஒரு கிறுக்கனாக இருக்கவேண்டும்! இல்லை என்றால்? இப்படி பட்ட ஒரு தீர்ப்பை வழங்கி இருப்பானா? நக்ஸலைட்டுகளுடன் தொடர்பு என்றால் அதற்க்கு என்ன? தண்டனை ஆயுள் தண்டனையா? அவர் நக்ஸலைட்டுகளுடன் தொடர்பு வைத்து கொலை செய்தாரா? இல்லை கொள்ளை அடித்தாரா? அவருக்கு ஆயுள் தண்டனை கொடுத்த நீதிபதியை நாம் என்னவென்று சொல்வது. இவன் படித்த நீதிதான் என்ன? இப்ப இவரது ஜாமீனை நிறுத்தி இருக்கும் நீதிபதியை என்னவென்று சொல்வது இவர்கள் எல்லாம் நீதி துரையின் களவாணி பயல்கள். இவர்களை மாதிரி நீதிபதிகள் நிறைந்தது தான் இந்திய நீதி துறை. பாபர் மசூதி தீர்ப்பை கட்ட பஞ்சாயத்து தீர்ப்பாக கொடுத்தார்கள். தொடர் குண்டு வெடிப்புகளை நடாத்திய பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ். முதல் குஜராத் கலவரத்தை திட்டமிட்டு நடத்திய மோடி வரை வெளியே இருகிறார்கள். காஞ்சி சங்கராச்சாரிக்கு ஜாமீன், நித்யானந்தாவுக்கு ஜாமீன் ஆனால் குழந்தைகள் நல மருத்துவர் விநாயக் சென்னிற்கு ஆயுள் தண்டனை. அவருக்கு நக்ஸலைட்டுகளுடன் தொடர்பில்லை என்பது வேறு கதை. இந்த முட்டாள் கயமை நீதித்துறையை மக்கள் செருப்பால் அடிக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை. நீதியை கொல்லும் இவர்களை பயங்கரவாதிகள் என்று சொல்வதில் தவறில்லை என்று நம்புகிறேன்.

0 comments:

Post a Comment