கோலாலம்பூர்,பிப்.28:சட்டவிரோதமாக போராட்டம் நடத்திய 109 இந்திய வம்சாவழியைச் சார்ந்த ஹிந்துத்துவா அமைப்பினரை போலீஸார் கைது செய்துள்ளனர்.பள்ளிக்கூட பாடத்திட்டத்தில் விவாத நூலை உட்படுத்தியதாக குற்றஞ்சாட்டி பேரணி நடத்திய தடைச் செய்யப்பட்ட ஹிந்துத்துவா அமைப்பான ஹிந்து ரைட்ஸ் ஆக்ஷன் ஃபோர்ஸ் உறுப்பினர்கள்தாம் போலீசாரால் கைது செய்யப்பட்டவர்கள்.
நகரத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாப்பதற்காக இவர்களை கைது செய்துள்ளதாக மாநகர போலீஸ் தலைவர் துல்கிஃப்லு அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக கட்டமைப்பைக் குறித்து விவாதிக்கும் மலேசிய மொழியிலான நாவலை பாடத்திட்டத்திலிருந்து நீக்கவேண்டும் என்பது ஹிந்துத்துவா அமைப்பினரின் கோரிக்கையாகும். ஆனால், திருத்தத்துடன் மட்டுமே இப்புத்தகம் படிப்பதற்காக வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தப் பிறகும் குழப்பம் ஏற்படுத்துவதற்காக இவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
இச்சம்பவம் வருத்தத்திற்குரியது எனவும், பேரணி நடத்தாதீர்கள் என வேண்டுகோள் விடுத்தபிறகும் அதனையும் மீறி செயல்பட்ட ஹிந்துத்துவா அமைப்பினர் நாட்டின் சட்டத்தை அவமதித்துள்ளார்கள் என துல்கிஃப்லு தெரிவிக்கிறார். மேலும் நாவலுக்கெதிராக போராடிய இவர்களுக்கு வேறு இந்தியர்களின் ஆதரவு இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 comments:
Post a Comment