Friday, February 18, 2011

குண்டுவெடி​ப்புகளில் பங்கு:கைது​க்கு பயந்து பிரதமர் அலுவலகத்தி​ல் தஞ்சம் புகுந்த ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத் தலை​வர்கள்

புதுடெல்லி,பிப்.18:இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ் தேசிய செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ்குமாரின் பங்கு வெட்ட வெளிச்சமானதைத் தொடர்ந்து கைது பயத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் பிரதமர் அலுவலகத்தில் அபயம் தேடியுள்ளனர்.

குண்டுவெடிப்புகளுடன் தங்களை தொடர்புப் படுத்துவதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமெனக்கோரி ஆர்.எஸ்.எஸ்ஸின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் ராம்மாதவ் பிரதமர் அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும், ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்க பொதுச்செயலாளர் சுரேஷ் பய்யா ஜோஷி பிரதமருக்கு எழுதிய கடிதமும் ஒப்படைக்கப்பட்டது.

கடந்த 14-ஆம் தேதி ராம்மாதவ் பிரதமர் அலுவலகத்திற்கு வருகைப்புரிந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால், பிரதமர் அலுவலகம் அதற்கு என்ன பதிலை கூறியது என்பது தெரியவில்லை.

பயங்கரவாதத்துடன் ஆர்.எஸ்.எஸ்ஸை தொடர்புபடுத்தக் கூடாது எனவும், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை தடைச் செய்யக்கூடாது எனவும் ஜோஷி அக்கடிதத்தில் பிரதமரிடம் மன்றாடியுள்ளார். ஆர்.எஸ்.எஸ்ஸை சீர்குலைக்க சிலர் நடத்தும் அரசியல் சதித்திட்டம் குறித்து விசாரிக்கவேண்டும் என்பது இரண்டாவது கோரிக்கையாகும்.

ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு எதிராக அவ்வியக்கத்துடன் தொடர்புடையவர்கள் அளித்த வாக்குமூலத்திற்கு எவ்வித மதிப்பும் அளிக்கக்கூடாது. இதனை சட்டரீதியாகத்தான் எதிர்கொள்ள வேண்டும். என அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் கைதான அஸிமானந்தாவின் வாக்குமூலம் கசிந்ததைக் குறித்து ஆர்.எஸ்.எஸ்ஸின் கடிதத்தில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை விபரங்களை பூரணமாக ரகசியமாக பாதுகாக்க வேண்டும். இந்திரேஷ் குமாருக்கோ அல்லது வேறு ஏதேனும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினருக்கோ குண்டுவெடிப்புகளில் பங்கில்லை எனவும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மலேகான், அஜ்மீர், ஹைதராபாத் ஆகிய குண்டுவெடிப்புகளின் விசாரணையை பிரதமர் கண்காணிக்க வேண்டும். ஹிந்து அமைப்பு என்பதனால் மட்டும் அபினவ் பாரத்தை ஆர்.எஸ்.எஸ்ஸுடன் தொடர்புப்படுத்தக் கூடாது. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் மற்றும் இந்திரேஷ் குமாரை இரசாயன ஆயுதங்கள் மூலம் கொல்வதற்கு மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கியக் குற்றவாளிகளான புரோகித்தும், தயானந்த் பாண்டேயும் சதித்திட்டம் தீட்டியது மலேகான் வழக்கில் 2009 ஜனவரியில் சமர்ப்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையுடனான டேப்பில் உள்ளது.

இதனை மஹாராஷ்ட்ரா ஏ.டி.எஸ் தொடர்ந்து விசாரணை நடத்தாதது மலேகான் வழக்குடன் ஆர்.எஸ்.எஸ்ஸை தகர்த்துவிட எண்ணியதாகும். புரோகித் மற்றும் அவரைச் சார்ந்தவர்களின் ரகசிய அஜண்டா என்னவென்பதும், அவர்களுக்கும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களுக்குமிடையேயான வித்தியாசத்தை கண்டுபிடிக்கவும் பிரதமர் முன்வந்து விசாரணை நடத்தவேண்டும். தேசத்தை கட்டி உயர்த்துவதுதான் ஆர்.எஸ்.எஸ்ஸின் லட்சியம். இக்காரியத்தில் முன்னாள் பிரதமர் மறைந்த லால்பகதூர் சாஸ்திரி ஆர்.எஸ்.எஸ்ஸை பாராட்டியுள்ளார். இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் சங்க்பரிவார்களுக்கெதிராக தொடர்ந்து வெளியிடும் அறிக்கைகளையும் பெயர்க்கூறாமல் அக்கடிதத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment