
நான்கு மாடிகளைக் கொண்ட 100 அறைகள் இடம்பெற்ற மிகப்பெரிய வீட்டில்தான் சனாவின் மிகப்பெரிய குடும்ப வாழ்க்கை தொடர்கிறது. இந்த வீட்டிற்கு பெயர், 'சுவான் தாட் ரன்' (புதிய தலைமுறையின் வீடு) என பெயரிடப்பட்டுள்ளது. ராணுவ ஒழுங்குமுறைகள் குடும்ப உறுப்பினர்களிடம் பேணப்படுகிறது. மிகவும் இளைய மனைவியான ஸாதியாங்கிதான் பெண்களைக் கொண்டு வீட்டில் துணிகளைக் கழுவுவது, சுத்தமாக்குவது போன்ற வேலைகளை செய்யவேண்டிய பொறுப்பு.

ஒரு தினத்திற்கான சாப்பாட்டிற்கு 30 கோழிகள் தேவைப்படுகின்றன. தனது முறுக்கேறிய வாலிப பருவத்தில் இவர் ஒரு வருடத்தில் 10 திருமணங்களை முடித்துள்ளார். மிக இளவயதுடைய மனைவிக்குத்தான் சனாவின் அடுத்துள்ள அறையில் தங்குவதற்கு அனுமதி. மூத்த மனைவியோ கடைசி அறையில் தங்கியுள்ளார். இதில் ஆச்சரியப்படத்தக்க செய்தி என்னவெனில், தனது குடும்பத்தை இன்னும் விரிவுப்படுத்த தான் அமெரிக்கா சென்றும் திருமணம் முடிக்கத் தயார் என சனா கூறுவதுதான்
0 comments:
Post a Comment