கடந்த முப்பது வருடங்களாக ஆட்சி செய்து வரும் எகிப்திய அதிபர் ஹுஸ்னி முபாரக் பதவி(Hosni Mubarak of Egypt) துறக்க வேண்டி பல நாட்களாக பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
200க்கு மேற்பட்ட சாவுகளும் பல நூறு பேரின் காயங்களும் இதுவரைக்கும் எந்த மாறுதலையும் சரியாக பிரதிபலிக்காது முன்னெடுக்கப்படுகிறது.
பாடசாலை மட்டங்களில் மாணவர்களுக்கிடையில் இடம்பெறும் ‘மணியை வெல்லுவது யார்’ என்று விளையாட்டுக்கு ஒப்பாய் எகிப்திய அரசியல் நிலை இருந்து வருவது சமூகத்தில் பாரிய கவலையையும் கோபத்தையும் உண்டுபண்ணியுள்ளது.
‘ஆட்சியாளரை நாங்கள் தீர்மானிப்போம்’ என்று மக்கள் குரல் எல்லா மட்டங்களிலும் எழுந்து நிற்கின்றது.
ஒரு நாட்டுக்குள் இவ்வளவு பெரிய மக்கள் புரட்சி வெடித்திருப்பது குறித்து Jஜ, நாடுகள் சபை கொCஞ்சம் சிந்தித்து சமாதான, தீர்ப்பு குறித்து சாத்வீக காரியங்களை முன்னெடுக்கலாம்.
ஆனால் நிலைமை இப்போது தலைகீழாக மாறி, இவர்கள் அநாதை, யாரும் கவனிப்பதற்கு இல்லை என்பது போல் அமெரிக்க அரசு தீர்ப்பு வழங்கி வருவது உலக அரசியல் மட்டத்தில் கலங்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
எகிப்திய நாட்டுப் பிரச்சினையை தீர்வுக்கு கொண்டு வர யார் வேண்டுமானாலும் உதவாலாம், ஆலோசனை வழங்கலாம், ஆனால் அதற்கு உலக மட்டத்தில் சர்வதேச அரசியல் சாணாக்கியங்கள், சாத்திரங்கள் சொல்லுவது பிரதிபலிக்கப்பட வேண்டும்.
‘ஆட்சி மாற்றம் தேவை’ என்று மக்கள் நடு ரோட்டுக்கு வந்திருக்கும் இந்த நேரத்தில் இதனால் ஏற்பட்டீருக்கின்ற நஷ்டங்களை அந்த மக்கள் சிந்திக்க தவரியுல்லனர்.
போராட்டம் என்ற பெயரில் மக்கள் வீட்டை விட்டு வெளியேறி இருக்கும் வேலையில் பல கலவுகள், கொள்ளைச் சம்பவங்கள் நடந்தேறுகின்றன.
இந்த நிலையை பயன்படுத்தி இலாப நோக்குடன் அமெரிக்க தன் விரலை நுழைப்பது ஒரு உத்தியோக பூர்வமான செலயாக பேசப்பட்டதாக தெரியவில்லை.
தாகித்த பிள்ளை கண்டதை குடிக்க ஓடுவது மன்னிக்கத்தக்கது, ஆனால் ஈராக் எண்ணையை குடிக்க அந்த நாட்டை அடித்து உடைத்தது முதல்
ஹைட்டி பூகம்பத்தைத் தொடர்ந்து சந்தர்ப்பம் பார்த்து அமெரிக்கா தன் இராணுவத்தை அங்கு தரை இறக்கியது (பூகம்பம் வந்ததும் அதற்குள் மாட்டுண்டவர்களை காப்பாற்ற, உணவற்றவர்களுக்கு உணவு தேடும் ஹைட்டி அரசாங்கம் தடமாறுகின்ற போது சர்வதேச நாடுகள் தங்கள் சார்பாக உணவு, உடை, மருந்து என்று உதவ முன்வந்தார்கள்) தேவைப்பட்டால் நாட்டையே கைப்பற்றலாம் என்ற நோக்குப் போல எகிப்துக்குள்ளும் புகுந்து கொள்ள முனைகிறது.
இந்த நேரத்தில் ஜ நாடுகள் சபைக்கு எந்த வேலையும் இல்லாது போகின்றது தானே?
இஸ்ரவேல் தன் காட்டுமிராண்டித் தனத்தை பலஸ்தீனர்கள் மீது காண்பிக்கும் போது,
இலங்கை மக்கள் பாரிய யுத்தத்தில் சிக்குண்டு தீர்ப்புத் தேடிய போது விழித்திறாத அமெரிக்கா இப்போது ஏன் இங்கு வந்திருக்கிறது?
அமெரிக்க ஜனாதிபதி தன் கதிரையில் இருந்து கொண்டு சொல்லுகிறார் பாருங்கள்:Egypt will not "go back to what it was"
0 comments:
Post a Comment