Thursday, February 3, 2011

ஸ்பெக்ட்ரம் விவகாரம்: ராஜா இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்!

புதுடெல்லி, பிப்.3- ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய தணிக்கை துறை கூறி இருந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வந்தது. டெலிபோன் துறை முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா மற்றும் அதிகாரிகளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் பல்வேறு கட்டங்களாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று 4- வது முறையாக ஆ.ராசாவிடம் மீண்டும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். காலையில் தொடங்கிய விசாரணை தொடர்ந்து மதியம் வரை நீடித்தது. பிற்பகல் 2.45 மணி அளவில் ஆ. ராசாவை சி.பி.ஐ. போலீசார் திடீரென்று கைது செய்தனர்.

ராசாவின் முன்னாள் செயலாளர் ஆர்.கே.சந்தோ லியா, தொலை தொடர்பு துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரியா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜா, மற்றும் தொலை தொடர்பு துறை முன்னாள் அதிகாரிகள் ஆர். கே.சந்தோலியா, பெஹீரியா ஆகியோர் நாளை பாட்டியாலா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என சி.பி.ஐ., அறிவித்துள்ளது.

0 comments:

Post a Comment