Saturday, February 5, 2011

ஜெர்மனி பாங்கியில் கறுப்பு பணத்தை பதுக்கிய 15 இந்தியர்கள் பெயர்- தெகல்கா பத்திரிகை வெளியிட்டது


புதுடெல்லி, பிப். 5-

இந்திய அரசியல்வாதிகளும், தொழில் அதிபர்களும் வெளிநாட்டு பாங்கிகளில் ரூ. 72 லட்சம் கோடி பதுக்கி வைத்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பணத்தை கைப்பற்றி இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் வற்புறுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே ஜெர்மனி விஜ்டென்ஸ்டில் நகரில் உள்ள எல்.ஜி.டி. பாங்கியில் கறுப்பு பணம் பதுக்கி வைத்துள்ள 18 இந்தியர் பட்டியலை ஜெர்மனி இந்தியாவுக்கு வழங்கியது. ஆனால் இவர்கள் பெயரை வெளியிடக்கூடாது என்று ஜெர்மனி நிபந்தனை விதித்ததால் அந்த பெயர்கள் வெளியிடவில்லை.

ஆனால் புலனாய்வு பத்திரிகையான தெகல்கா இது பற்றி விசாரணை நடத்தி 15 பேர் பெயரை கண்டு பிடித்து தனது பத்திரிகையில் வெளியிட்டு உள்ளது. 12 தனிப்பட்ட நபர்களும், 3 அறக்கட்டளை பெயர்களும் அதில் உள்ளன. அதன் விவரம்:-

1. மனோஜ் துபிலியா, 2. ரூபல்துபிலியா, 3. மோகன் துபிலியா, 4. ஹஸ்முக் சாந்தி, 5. சிந்தன்சாந்தி, 6. திலிப் மேத்தா, 7. அருண்மேத்தா, 8. அருண்கோச்சார், 9. குன்வந்தி மேத்தா, 10. ரஜினிகாந்த் மேத்தா, 11. பிரமோத் மேத்தா, 12. அசோக் ஜெய்யூரியா, 13. ராஜ்பவுண்டேசன், 14. ஊர்வசி பவுண்டேசன், 15. அம்புரு நோவா டிரஸ்ட்.
1 1

0 comments:

Post a Comment